/tamil-ie/media/media_files/uploads/2019/01/merina-2-7.jpg)
state bank of india online sbi
வங்கி சேவையில் தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் பொதுத் துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காகவே பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதத்தை 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, ஒரு கோடி ரூபாய் வரையில் 1 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது புதிய வட்டி உயர்வின் படி பொதுப் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீத வட்டி விகித லாபத்தினையும் கனரா வங்கி அளிக்கிறது.
இத்தனை காரணங்களுக்காக எஸ்.பி.ஐ உங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது!
கனரா வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம் கனரா வங்கியின் பிகசட் டெபாசிட் திட்டத்தில் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்யும் போது எந்த அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழு வாய்ப்புகள் அதிகம் .
ஹோம் லோன் முக்கியம் தான்.. ஆனால் அதை விட முக்கியம் வட்டி பற்றி தெரிந்துக் கொள்வது!
அந்த கேள்விக்கு பதில் இதோ.. கனரா வங்கியில் 1 கோடிக்கும் கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வட்டிவிகிதம்.
> 1 -2 வருட திட்டம்- 7 சதவீதம் வட்டி – 7.5 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)
> 2 -3 வருட திட்டம்- 6.7 சதவீதம் வட்டி – 7.2 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)
> 3 -5 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)
> 5 -8 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)
> 8 -10 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)
> 444 நாட்கள் திட்டம் 7.05 சதவீதம் வட்டி – 7.55 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.