Advertisment

பணத்தை பிக்சட் டெபாசிட்டில் போடப்போகிறீர்களா? : கனரா வங்கி தான் சிறந்த தேர்வு

2018 நவம்பர் 1 முதல் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை கனரா வங்கி உயர்த்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fixed deposit, state bank of india, canara bank, senior citizens, interest rates, கனரா வங்கி,பிக்சட் டெபாசிட், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மூத்தகுடிமக்கள், வட்டிவிகிதம்

fixed deposit, state bank of india, canara bank, senior citizens, interest rates, கனரா வங்கி,பிக்சட் டெபாசிட், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மூத்தகுடிமக்கள், வட்டிவிகிதம்

பாமரர்கள் முதல் பணக்காரர்கள் வரை பலரும் பணத்தை தமது எதிர்காலம் கருதி வங்கியில் தான் வைத்து பாதுகாப்பார்கள்.

Advertisment

ஆனால் அவர்களின் தேவை மற்றும் வசதிக்கேற்ப வங்கிகள் மாறுபடலாம். மேலும் வங்கிகளில் கணக்கை தொடரும் பலரும் நீங்கள் தொடர இருக்கும் சேமிப்பு கணக்குகள், பிக்சட் டெபாசிட், வீட்டுக்கடன் போன்றவற்றிற்கு எவ்வளவு சலுகைகள் தருகின்றன, என்பது குறித்து பெரிதும் கவலை கொள்வதில்லை. இந்நிலையில், மக்களுக்கு உதவும் வகையில் கனரா வங்கி, பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டிவிகிதம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

2018 நவம்பர் 1 முதல் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை கனரா வங்கி உயர்த்தியுள்ளது.

1 வருடத்திற்கு, ஒரு கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்யும் போது புதிய வட்டி உயர்வின் படி பொது பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதமும் கனரா வங்கி அளிக்கிறது.

மேலும் 1 கோடிக்கும் கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வட்டிவிகிதம்.

1 -2 வருட திட்டம்- 7 சதவீதம் வட்டி – 7.5 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

2 -3 வருட திட்டம்- 6.7 சதவீதம் வட்டி – 7.2 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

3 -5 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

5 -8 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment