சேமிப்பு திட்டங்களில் பிக்சட் டெபாசிட் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பிட்ட கால வரப்பிற்கு இத்திட்டத்தில் முதலீடு செய்கையில், முதர்ச்சி காலத்தில் அனைத்து திட்டங்களை காட்டிலும் அதிக வட்டி கிடைக்கின்றன. அதே சமயம், பாதுகாப்பான முதலீடும் ஆகும். வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதங்களை அதிகரிப்பது வழக்கம்.
அந்த வகையில், கனரா வங்கி, ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய வட்டி உத்தரவானது, மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
கனரா வங்கி கூற்றுப்படி, 1 ஆண்டிற்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு இனி 5.1 சதவீத வட்டி வழங்கப்படும். அதே சமயம், 1 முதல் 2 ஆண்டு திட்டத்தில் வட்டி விகிதமானது 5இல் இருந்து 5.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 2 முதல் 3 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 5.20 சதவீத வட்டியும், 3 முதல் 5 ஆண்டு வரையிலான திட்டத்திறகு வட்டி விகிதம் 5.25 சதவீதத்திலிருந்து 5.45 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
அதே சமயம், 5 முதல் 10 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 5.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில், மூத்த குடிமக்களுக்கு அனைத்து திட்டங்களுக்கும் 0.50 வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil