canara bank net banking : இந்தியாவில் செயல்பட்டு பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அப்ப அதிர்ச்சி தகவலை தருவதையே வழக்கமாக வைத்துள்ளனர். எஸ்பிஐ,கனரா வங்கிகளில் அக்கவுண்ட் தொடரும் வாடிக்கையாளர்கள் அவ்வபோது இந்த அதிர்ச்சி அறிவிப்புகளை தாங்கிக் கொண்டு தான் ஆக வேண்டும்.
அந்த வகையில் கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முன்பெல்லாம் பொதுமான அளவு பணத்தை அக்கவுண்டில் வைக்கவில்லை என்றால் தான் மினிமல் பேலன்ஸ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது
பின்பு, ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஒரு நபர் தனது அக்கவுண்டில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் அபராதம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆம் கனரா வங்கியின் இந்த புதிய அறிவிப்பு ஏற்கனவே நடைமுறைக்கு வந்து விட்டது.
மாதத்திற்கு 3 முறை மட்டுமே வங்கி கணக்கில் 50,000 ரூபாய் வரையில் இலவசமாக பணமாக டெபாசிட் செய்ய முடியும். அதன் பிறகு டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 1 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
ஞாபகத்தில் இருக்கட்டும் எஸ்பிஐ-யில் இந்த மாதம் முதல் எல்லாமே மாறிவிட்டது!
மேலும் இந்த சேவை கட்டணமானது குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை இருக்கும் என்றும் கனரா வங்கி தெரிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், நேரடி பணப்பரிவர்த்தனையை குறைக்கவும் இந்த நடவடிக்கையை வங்கி நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில், இத்தகைய கட்டண அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன