canara bank netbbanking limit : கனரா வங்கி வாடிக்கையாளர்களே இந்த தகவல் உங்களுக்கு தான். நீங்கள் ஏடிஎம்மில் 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான ரொக்கத்தை எடுக்க விரும்பினால், நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை பதிவு செய்தால் தான் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும். ஏ.டி.எம். இயந்திரத்தில் பதிவு செய்த பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
Advertisment
canara bank netbbanking limit : என்ன விதிமுறை?
இது, கனரா வங்கி ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கு குறைவாக பணம் எடுப்பவர்கள் பழைய முறையிலேயே பணம் பெற்றுக்கொள்ளலாம் . எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் வசதியை அளிக்கத் தொடங்கியுள்ளன.
இனிமே நீங்கள் கனரா ஏடிஎம் சென்றால் கட்டாயம் மொபைலை எடுத்து செல்லுங்கள்.இனிமே மொபைல் இல்லாமல் பணம் எடுக்க முடியாது. ஓ.டி.பி எண்ணை பதிவு செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.நாட்டிலேயே முதல் முறையாக இந்த வசதி கனரா வங்கியில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கிம்மர் மற்றும் ஜாமர் போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி போலி ஏ.டி.எம் கார்டுகளைத் தயாரித்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் சம்பவங்களை தடுக்க இதுப்போன்ற நடவடிக்கையை கொண்டு வந்துள்ளது கனரா வங்கி.