கனரா வங்கி முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். தற்போது, சிண்டிகேட் வங்கி அதனுடன் இணைக்கப்பட்ட பிறகு பரந்த அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
மேலும் இந்த இரண்டு வங்கிகளின் இணைப்பும் நித்ய நிதி திட்டம் போன்ற சில திட்டங்களையும் ஒன்றிணைக்க வழிவகுத்தது.
இந்நிலையில், 01.04.2020 முதல், பழைய சிண்டிகேட் வங்கியின் பிக்மி டெபாசிட் திட்டம் மற்றும் கனரா வங்கியின் புதிய நித்ய நிதி டெபாசிட் (NNND) திட்டம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டன. தற்போது இது NITYA NIDHI DEPOSIT (NND) திட்டம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், கனரா வங்கியின் நித்ய நிதி திட்டம் சிறு சேமிப்புகளை பெருக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீங்கள் இந்தக் கணக்கைத் திறந்தால், வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் உங்கள் வசதிக்கேற்ப தினசரி அல்லது குறைவான இடைவெளியில் உங்கள் சேமிப்பை உங்கள் வீட்டு வாசலில் சேகரித்து வரவு வைப்பார். நீங்கள் வங்கி செல்ல தேவை இல்லை.
கனரா வங்கி நித்ய நிதி திட்டக் கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு முதிர்வு காலத்தில் 2 சதவீத வட்டி வழங்குகிறது. முதிர்வு காலம் 63 மாதங்கள் அல்லது ஐந்து ஆண்டுகள் 3 மாதங்கள் ஆகும்.
குறைந்தபட்ச வசூல் தொகை ரூ 50 மற்றும் தினசரி வசூல் அதிகபட்ச வரம்பு ரூ 1000 (ஒரு மாதத்தில் அதிகபட்சம் ரூ 30000). முதிர்வுக்கு முன் டெபாசிட் திரும்பப் பெற்றால் வட்டி விகிதம் மாறுபடும்.
12 மாதங்களுக்குள் கணக்கை முன்கூட்டியே மூடினால் 3 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். கணக்கு ஒரு வருடத்திற்கு மேல் இருந்தால் அபராதம் விதிக்கப்படாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil