தாராள மனதுடன் கடன் தரும் கனரா வங்கி! - கொரோனா கூட வாழ்த்திச் செல்லும்

Canara Bank: கனரா வங்கியில் தங்களுடைய பழைய பணி மூலதனத்தில் (existing working capital) அல்லது குறைந்த விதிமுறைகளுடன் கடன் வாங்குபவர்களின் வகையைப் பொறுத்து கடன்...

Canara Bank Credit Support: கோவிட் -19 லிருந்து மீண்டு வர கனரா வங்கி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கார்பொரேட்கள், விவசாயம், வணிக நிறுவனங்கள் மற்றும் சில்லரை கடன்தாரர்களுக்கு கடன் உதவி வழங்குகிறது.


கனரா கடன் உதவி (Canara Credit Support) என்ற ஒரு புதிய கடன் திட்டத்தை பொதுத்துறை வங்கியான கனரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிட் -19 பரவல் காரணமாக வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக ஏற்பட்டுள்ள liquidity/ cash flow mismatches ஆகியவற்றில் இருந்து மீண்டு வருவதற்கு தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக உதவுவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Canara Bank Loan : கனரா வங்கி கடனுதவி

‘Canara Credit Support-Covid-19’ என்ற புதிய திட்டத்தின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கார்பொரேட்கள், விவசாயம், வணிக நிறுவனங்கள் மற்றும் சில்லரை கடன்தாரர்கள் 10 முதல் 35 சதவிகிதம் வரை தங்களுடைய பழைய பணி மூலதனத்தில் (existing working capital) அல்லது குறைந்த விதிமுறைகளுடன் கடன் வாங்குபவர்களின் வகையைப் பொறுத்து கடன் வரம்பு நிர்ணயித்து ஜுன் 30 வரை வாங்கிக்கொள்ளலாம். இந்த வசதிக்கு எந்தவித கூடுதல் பாதுகாப்பும் தேவையில்லை, என்று வங்கி ஒரு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் எப்போதும் முன்னனியில் உள்ளோம். கனரா வங்கி ஏற்கனவே சேமிப்பு வங்கி கணக்கில் குறைந்த பட்ச வைப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தையும், பணம் எடுப்பதற்கு வேறு வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தவதற்கான ஏடிஎம் கட்டணத்தையும் ஜூன் 30 வரை ரத்து செய்துள்ளது.

கோவிட் -19 பரவல் காரணமாக வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துவதோடு பல்வேறு வகையான டிஜிட்டல் முறைகள் மூலம் வங்கியோடு இணைந்திருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதோடு ஆரோக்கியமாக இருக்கவும் கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களை அறிவுறுத்துகிறது. நாம் ஒன்றாக இணைந்து கோவிட் -19 லிருந்து வெகு விரைவில் வெளிவரலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close