கனரா பேங்க் வாடிக்கையாளர்கள் ஹாப்பியோ ஹாப்பி! கார்,ஹோம் லோன் பற்றி பயமே வேண்டாம்!

வீட்டுக்கடன், வாகனக் கடன் மீதான வட்டியை கனரா வங்கி 0.75 சதவிதம் குறைத்துள்ளது.

sbi bank account sbi bank account schemes sbi
sbi bank account sbi bank account schemes sbi

canara bank online netbanking canara bank: பொதுவாக மக்கள் பணத்தை வருங்காலத்திற்காக சேர்ப்பது வங்கியில் தான்.இது வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதிக்கேற்ப வங்கிகள் மாறுபடலாம். அதே போல் வங்கிகளில் கணக்கு தொடரும் பலரும் தொடர இருக்கும் சேமிப்பு கணக்குகள்
பிக்சட் டெபாசிபட், வீட்டுக்கடன் போன்றவற்றிற்கு எவ்வளவு சலுகைகள் தருகின்றன, எந்த மாதிரியான வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன போன்றவற்றை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் நம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் நமக்கு இக்கட்டான சூழ்நிலையில் எந்த மாதிரியான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது என்பது மிக முக்கியம்.

3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்! அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது

அந்த வகையில் கனரா வங்கியின் முக்கிய அறிவிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது.கனரா வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.வீட்டுக்கடன், வாகனக் கடன் மீதான வட்டியை கனரா வங்கி 0.75 சதவிதம் குறைத்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை, 0.75 சதவிதம் குறைத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கனரா வங்கியும், கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்திருக்கிறது.கனரா வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் மீதான வட்டியும் 0.35 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் பலருக்கும் மகிழ்சியை ஏற்படுத்தி இருக்கும். அதே நேரம், பலருக்கும் இந்த தகவல் தெரியவில்லை. கனரா வங்கியில் ஹோம் லோன், கார் லோன் போன்றவற்றில் வட்டி அதிகம் என நினைத்து பெரும்பாலோனார் தவிர்த்து வருகின்றனர். அதனால் தான் இந்த தகவல் மீண்டும் பகிரப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Canara bank online netbanking canara bank netbanking online canarabank net banking

Next Story
வங்கிகளில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்!savings account savings bank account savings
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com