Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய கனரா வங்கி: புதிய வங்கி இதுதான்!

கனரா வங்கி வழங்கும் சமீபத்திய எஃப்.டி விகிதங்கள் அக்டோபர் 27, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

author-image
WebDesk
New Update
fixed deposit, state bank of india, canara bank, senior citizens, interest rates, கனரா வங்கி,பிக்சட் டெபாசிட், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மூத்தகுடிமக்கள், வட்டிவிகிதம்

மூத்த குடிமக்கள் 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75% வரை சம்பாதிக்கலாம்.

பொதுத்துறை வங்கியான கனரா ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்களை திருத்தி உள்ளது.

இந்த மாற்றத்திற்குப் பிறகு, மூத்த குடிமக்கள் 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75% வரை சம்பாதிக்கலாம். பொது மக்கள் 7.25% வரை ரிட்டன் பெறலாம்.

தொடர்ந்து, கனரா வங்கி தற்போது 4.00% முதல் 6.70% வரை ஏழு நாள்கள் முதல் பத்து ஆண்டுகள் வரை நீடிக்கும் டெபாசிட்களுக்கு வழங்குகிறது.

கனரா வங்கி வழங்கும் சமீபத்திய எஃப்.டி விகிதங்கள் அக்டோபர் 27, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

Advertisment

கனரா வங்கி எஃப்.டி புதிய வட்டி விகிதங்கள்

7 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் 46 முதல் 90 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 5.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

91 முதல் 179 நாள்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு, 5.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

180 முதல் 269 நாள்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 6.15% ஆகும். 270 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.25% ஆகும்.

அதே சமயம் ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.90% மட்டுமே கிடைக்கும்.

மேலும், கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி வழங்கும். இது அழைக்கக்கூடிய வைப்புத்தொகைகளுக்கு 7.85% ஆகவும், அழைக்க முடியாத வைப்புத்தொகைகளுக்கு 8% ஆகவும் உள்ளது.

முன்கூட்டிய அல்லது பகுதியளவு திரும்பப் பெறுதல் வைப்புகளுக்கு 1.00% அபராதம் விதிக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment