/tamil-ie/media/media_files/uploads/2019/10/a279.jpg)
எஸ்பிஐ, கனரா வங்கிகளில் கணக்கைத் தொடரும் வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய அறிவிப்புகளை இந்த வங்கி வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில், கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன் அறிவிப்பில், முன்பெல்லாம் போதுமான அளவு பணத்தை அக்கவுண்டில் வைக்கவில்லை என்றால் தான் மினிமல் பேலன்ஸ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது
பின்பு, ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஒரு நபர் தனது வைப்பில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை வைப்பு செய்தாலும் அபராதம் என்ற நிலைக்கு வந்து விட்டது.
கனரா வங்கியின் இந்த புதிய அறிவிப்பு ஏற்கனவே நடைமுறைக்கு வந்து விட்டது இது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த அறிவிப்பையடுத்து மாதத்திற்கு 3 முறை மட்டுமே வங்கி கணக்கில் 50,000 ரூபாய் வரையில் இலவசமாக வைப்பு செய்ய முடியும். அதன் பிறகு வைப்பு செய்யும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 1 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
அத்தோடு இந்த சேவை கட்டணம் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை இருக்கும் என்றும் கனரா வங்கி தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில், இத்தகைய கட்டண அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us