canara bank savings account canarabanak savings : கனரா வங்கி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கார்பொரேட்கள், விவசாயம், வணிக நிறுவனங்கள் மற்றும் சில்லரை கடன்தாரர்களுக்கு கடன் உதவி வழங்குகிறது.
Advertisment
கனரா கடன் உதவி தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக உதவுவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
canara bank savings account கனரா வங்கி கடனுதவி!
புதிய திட்டத்தின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கார்பொரேட்கள், விவசாயம், வணிக நிறுவனங்கள் மற்றும் சில்லரை கடன்தாரர்கள் 10 முதல் 35 சதவிகிதம் வரை தங்களுடைய பழைய பணி மூலதனத்தில் (existing working capital) அல்லது குறைந்த விதிமுறைகளுடன் கடன் வாங்குபவர்களின் வகையைப் பொறுத்து கடன் வரம்பு நிர்ணயித்து வாங்கிக்கொள்ளலாம். இந்த வசதிக்கு எந்தவித கூடுதல் பாதுகாப்பும் தேவையில்லை.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை, 0.75 சதவிதம் குறைத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கனரா வங்கியும், கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்திருக்கிறது.
கனரா வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள் மீதான வட்டியும் 0.35 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதிக்கு எந்தவித கூடுதல் பாதுகாப்பும் தேவையில்லை, என்று கனரா வங்கி ஒரு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் எப்போதும் முன்னணியில் உள்ளோம். கனரா வங்கி ஏற்கனவே சேமிப்பு வங்கி கணக்கில் குறைந்த பட்ச வைப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தையும், பணம் எடுப்பதற்கு வேறு வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தவதற்கான ஏடிஎம் கட்டணத்தையும் ஜூன் 30 வரையில் ரத்து செய்திருந்தது குறிப்பிட்த்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil