மூத்த குடிமக்களுக்காக கனரா வங்கி சிறப்பு சேமிப்பு வங்கிக் கணக்கை வழங்குகிறது. கனரா வங்கி ஜீவந்தரா சேமிப்புக் கணக்கு மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக சிறப்பு வாய்ந்தது.
மேலும், இது மூத்த குடிமக்களுக்கு பல்வேறு இலவச பலன்களை வழங்குகிறது. வங்கியின் படி, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்திய மூத்த குடிமக்கள் கணக்கிற்கு தகுதியுடையவர்கள் ஆவுார்கள்.
பூஜ்ஜிய இருப்புடன் கணக்கைத் திறக்க முடியும் என்றாலும், மூத்த குடிமக்கள் சராசரியாக ஆண்டுக்கு 20,000 ரூபாய் அல்லது மாதத்திற்கு சுமார் 1,700 ரூபாய் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
இந்தக் கணக்கில் வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 2.9 சதவீத வட்டி கிடைக்கும். கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய இலவச டெபிட் கார்டுகளை வங்கி வழங்குகிறது.
இலவச டெபிட் கார்டு என்பது காரை வழங்குவதற்கு வங்கி எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது அல்லது வருடாந்திரக் கட்டணம் வசூலிக்கப்படாது. ஜீவந்தரா சேமிப்புக் கணக்கில் தினசரி ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வரம்பு ரூ.25,000 ஆகும்.
மேலும், கனரா வங்கியின் அனைத்து ஏடிஎம்களிலும் வரம்பற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகளை வங்கி இலவசமாக வழங்குகிறது. பாஸ் புக் வசதியைத் தவிர வங்கி ஒவ்வொரு மாதமும் கணக்கு அறிக்கைகளையும் இலவசமாக வழங்குகிறது.
மற்ற இலவச சேவைகளில் எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள், வங்கிகளுக்கிடையேயான மொபைல் பேமெண்ட்கள், நெட் பேங்கிங் மற்றும் மாதத்திற்கு இரண்டு NEFT/RTGS பணம் ஆகியவையும் அடங்கும்.
காசோலை புத்தக வசதியைப் பொருத்தவரை, மூத்த குடிமக்கள் கணக்கு வைத்திருப்பவர் ஆண்டுக்கு 60 லீஃப்கள் வரை அச்சிடப்பட்ட காசோலையை இலவசமாகப் பெறலாம்.
மேலும், ஓய்வூதிய கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கனரா வங்கி கடன் வசதியையும் வழங்குகிறது. கனரா பென்ஷன் திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தின் 10 மடங்கு வரை, அதாவது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கடன் வழங்கப்படலாம்.
இதற்கிடையில், கணக்கு வைத்திருப்பவர் வங்கியில் ஓய்வூதியக் கணக்கை வைத்திருந்தால், மூத்த குடிமக்களும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தனிநபர் விபத்துக் காப்பீட்டைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.