canarabank net banking : பொதுவாக மக்கள் பணத்தை வருங்காலத்திற்காக சேர்ப்பது வங்கியில் தான்.இது வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதிக்கேற்ப வங்கிகள் மாறுபடலாம். அதே போல் வங்கிகளில் கணக்கு தொடரும் பலரும் தொடர இருக்கும் சேமிப்பு கணக்குகள்
Advertisment
canarabank net banking : மிஸ் பண்ணாதீங்க!
பிக்சட் டெபாசிபட், வீட்டுக்கடன் போன்றவற்றிற்கு எவ்வளவு சலுகைகள் தருகின்றன, எந்த மாதிரியான வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன போன்றவற்றை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் நம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் நமக்கு இக்கட்டான சூழ்நிலையில் எந்த மாதிரியான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது என்பது மிக முக்கியம்.
அந்த வகையில் கனரா வங்கியின் முக்கிய அறிவிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது.கனரா வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் வட்டி 0.40 சதவீதம் குறைந்து 6.90 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.வட்டி விகிதங்களின் மாற்றம் ஜூன் 7 முதல் அமலுக்கு வந்துள்ளது.
Advertisment
Advertisements
முன்னதாக கடந்த மே மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் குறைத்து 6.90 சதவீதமாக குறைத்தது. இதன் பின்னர், பல வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.6 மாத கடனுக்கான வட்டி விகிதம் 7.60 சதவீதமாகவும், மாதாந்திர கடன் விகிதம் 7.50 சதவீதமாகவும் உள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ வீதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களின் வட்டி விகிதத்தையும் 0.40 சதவீதம் குறைத்து 6.85 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.