canarabank netbanking mobile : கனரா வங்கி வாடிக்கையாளர்களே இந்த தகவல் உங்களுக்கு தான். இனிமே நீங்கள் கனரா ஏடிஎம் சென்றால் கட்டாயம் மொபைலை எடுத்து செல்லுங்கள்.இனிமே மொபைல் இல்லாமல் பணம் எடுக்க முடியாது.
Advertisment
ஸ்கிம்மர் மற்றும் ஜாமர் போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி போலி ஏ.டி.எம் கார்டுகளைத் தயாரித்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் சம்பவங்களை தடுக்க இதுப்போன்ற நடவடிக்கையை கொண்டு வந்தது கனரா வங்கி.
நீங்கள் ஏடிஎம்மில் 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான ரொக்கத்தை எடுக்க விரும்பினால், நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை பதிவு செய்தால் தான் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும். ஏ.டி.எம். இயந்திரத்தில் பதிவு செய்த பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஓ.டி.பி எண்ணை பதிவு செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.
இது, கனரா வங்கி ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கு குறைவாக பணம் எடுப்பவர்கள் பழைய முறையிலேயே பணம் பெற்றுக்கொள்ளலாம்.
Advertisment
Advertisements
எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கும் வசதியை அளிக்கத் தொடங்கியுள்ளன.
ஏடிஎம் மோசடிகள் தொடர்ந்து அதிகரிப்பததால் கடந்த ஜனவரி மாதம் சிப் கொண்ட ஏ.டி.எம். கார்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இருந்த போதும் சில கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் கனரா வங்கி இதுப் போன்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.