கார் கடனுக்கு 7.60% முதல் வட்டி; குறைவான செயலாக்க கட்டணம்: ஆஃபர்களை அள்ளித் தரும் வங்கிகளின் லிஸ்ட் இதோ

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் யூகோ வங்கி (UCO Bank) ஆகியவை முறையே 7.85% மற்றும் 7.60% என்ற தொடக்க விகிதங்களுடன் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி, செயலாக்க கட்டணமாக 0.25% (ரூ. 1,000 - ரூ. 1,500) வரை வசூலிக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் யூகோ வங்கி (UCO Bank) ஆகியவை முறையே 7.85% மற்றும் 7.60% என்ற தொடக்க விகிதங்களுடன் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி, செயலாக்க கட்டணமாக 0.25% (ரூ. 1,000 - ரூ. 1,500) வரை வசூலிக்கிறது.

author-image
WebDesk
New Update
Car loan

தற்போதைய சூழலில் புதிய கார் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இந்த ஜூலையில் கார் கடன் விகிதங்கள் எவ்வாறு உள்ளன என்பதை கவனிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இடையே இருக்கும் வட்டி விகிதம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை இதில் காணலாம்.

Advertisment

பொதுத்துறை கடன் வழங்குநர்களில், கனரா வங்கி ஆண்டுக்கு 7.70% முதல் 11.70% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை செயலாக்க கட்டணங்களில் 100% தள்ளுபடி என்ற சிறப்பு சலுகையையும் வழங்குகிறது. அதேபோல, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆண்டுக்கு 7.80% முதல் 9.70% வரை விகிதங்களை கொண்டுள்ளது. மேலும் ரூ. 1,000 வரை ஒரு நிலையான செயலாக்க கட்டணத்தையும் வசூலிக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மற்றும் யூகோ வங்கி (UCO Bank) ஆகியவை முறையே 7.85% மற்றும் 7.60% என்ற தொடக்க விகிதங்களுடன் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி, செயலாக்க கட்டணமாக 0.25% (ரூ. 1,000 - ரூ. 1,500) வரை வசூலிக்கிறது. அதே நேரத்தில் யூகோ வங்கியின் கட்டணம் சற்று அதிகமாக 0.50% (ரூ. 5,000) ஆக உள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI): ஆண்டுக்கு 8.90% - 9.95% வட்டி விகிதம் மற்றும் செயலாக்க கட்டணம் ரூ. 750 - ரூ. 1,500 என்று வசூலிக்கப்படுகிறது.

Advertisment
Advertisements

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank of Maharashtra): ஆண்டுக்கு 7.70% - 12.00% வட்டி விகிதம் மற்றும் 0.25% செயலாக்க கட்டணமாக நிர்ணயித்துள்ளது (அதிகபட்சம் ரூ. 15,000). 

இந்தியன் வங்கி (Indian Bank): ஆண்டுக்கு 7.75% - 9.85% வட்டி விகிதம் மற்றும் செயலாக்க கட்டணம் ரூ. 1,000 என்று வசூலாகிறது.

தனியார் வங்கிகள் வழங்கும் சலுகைகள்:

தனியார் வங்கிகள் பொதுவாக அதிக விகிதங்களை வசூலிக்கின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆண்டுக்கு 9.10% இல் தொடங்கி, கடன் தொகையில் 2% வரை செயலாக்க கட்டணங்களை வசூலிக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் விகிதங்கள் ஆண்டுக்கு 9.20% இல் இருந்து தொடங்குகின்றன. செயலாக்க கட்டணமாக 1% (ரூ. 3,500 - ரூ. 9,000) வரை வசூலிக்கப்படுகிறது. ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி (IDFC First Bank) மற்றும் ஃபெடரல் வங்கி (Federal Bank) முறையே ஆண்டுக்கு 9.99% மற்றும் 10.40% இல் இருந்து விகிதங்களை தொடங்குகின்றன.

அந்த வகையில், உங்களது நிதி தேவை மற்றும் பொருளாதா நிலை குறித்து சரியான புரிதலுடன் உங்களுக்கு ஏற்ற வங்கியை தேர்வு செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Car Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: