Advertisment

ஜூலை 2020 ல் அறிமுகமாக உள்ள MG Hector Plus, Honda City மற்றும் பிற புதிய கார்கள்

Hyundai cars : முதல்முறையாக Hyundai’ ன் innovative Intelligent Manual Transmission இந்த Venue மாடல் SUV ரக காரில் அறிமுகமாக உள்ளது. Turbo-petrol engine மூலம் இயங்கும் இந்த கச்சிதமான SUV ரக காரில் manual கீயர் பாக்ஸ் அகற்றப்பட உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cars, new varianths, automobile industry, corona virus lockdown, honda city, hector plus, new cars in India, july release, hyundai, hyundai news, hyundai news in tamil, hyundai latest news, hyundai latest news in tamil

cars, new varianths, automobile industry, corona virus lockdown, honda city, hector plus, new cars in India, july release, hyundai, hyundai news, hyundai news in tamil, hyundai latest news, hyundai latest news in tamil

ஊரடங்கிலிருந்து மெல்ல மெல்ல தளர்வு வரும் வேளையில் மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளனர். பலர் தங்கள் கார்களின் அறிமுகத்தை வலைதளம் மூலமாகவோ அல்லது பத்திரிகை செய்தி குறிப்புகள் மூலமாகவோ செய்துள்ளனர். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய Honda City, Hyundai Tucson மற்றும் பல கார்கள் இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாக போகின்றன. மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் புதிய மாடல் கார்களுக்கான முன்பதிவை ஆன்லைன் மூலமாக செய்ய தொடங்கியுள்ளனர். ஒருவர் வீட்டில் இருந்தவாரே முன்பதிவு, வாகன பதிவு ஆகியவற்றை அன்லைன் மூலமாக செய்து விருப்பப்பட்ட இடத்தில் புதிய காரை டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். வசதியான பல நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்த மாதம் வெளிவர உள்ள கார்கள் குறித்துப் பார்க்கலாம்.

Advertisment

Honda City

 

publive-image

முற்றிலும் புதிதான Honda City கார் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது, என அதன் ஜப்பான் உற்பத்தியாளர் உறுதியளித்துள்ளார். புதிய Honda City கார் petrol/diesel எஞ்சின் மற்றும் petrol எஞ்சினில் தானியங்கி (automatic) ஆப்ஷனிலும் வரவுள்ளது. உத்தேச விலை ரூபாய் 12 லட்சம் முதல் ஆரம்பமாக உள்ளது.

Hyundai Tucson

 

publive-image

இந்தியாவில் Hyundai தனது Tucson காரை ஜூலை 14 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. நடுத்தர அளவுள்ள (mid-size) SUV ரக காரான இது Skoda Karoq மாடல் காருக்கு போட்டியாக அமையும். பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் அகிய இரு ஆப்ஷனிலும் இந்த வகை கார்கள் வரவுள்ளது. டீசல் எஞ்சின் கார்களில் 6-speed manual, 8-speed automatic மற்றும் AWD ஆகிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளது. இதன் உத்தேச விலை ரூபாய் 18 லட்சம் முதல் ஆரம்பமாக உள்ளது.

Hyundai Venue iMT

 

publive-image

முதல்முறையாக Hyundai’ ன் innovative Intelligent Manual Transmission இந்த Venue மாடல் SUV ரக காரில் அறிமுகமாக உள்ளது. Turbo-petrol engine மூலம் இயங்கும் இந்த கச்சிதமான SUV ரக காரில் manual கீயர் பாக்ஸ் அகற்றப்பட உள்ளது. மேலும் clutch ஐ இயக்கும் அழுத்தத்தை குறைக்கும் விதமாக புதிய 2-pedal தொழிநுட்பம் இதில் வர உள்ளது. Tucson கார் அறிமுகம் ஆகும் அதே தேதியில் அல்லது ஒருவேளை அதன் பின்னர் இந்த காரும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் விலை ரூபாய் 7.5 லட்சத்திலிருந்து ஆரம்பமாகும்.

MG Hector Plus

 

publive-image

MG தனது Hector Plus SUV காரின் படங்கள் மற்றும் பிரவுச்சரை (brochures) வெளியிட்டுள்ளது. இந்த Hector Plus SUV மாடல் கார், 6 அல்லது 7 இருக்கைகள் கொண்ட SUV பிரிவில் நுழைவதற்காக MG அறிமுகப்படுத்தியுள்ள காராகும். அதிக விலையுள்ள Toyota Innova Crysta MPV காரை விட இந்த MG Hector Plus கார் ஒரு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்த காரும் ஜூலு 15 ஆம் தேதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் ex-showroom விலை ரூபாய் 17 லட்சம் முதல் ஆரம்பமாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment