Advertisment

2023-இல் ஆடி, பென்ஸ், மாருதி, டாடா, ஹூண்டாய் கார்கள் எவ்வளவு விலை உயரும்?

மாருதி, டாடா, ஹூண்டாய் உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவனங்கள் 2023இல் கார்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன. ஆடி கார் விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cars to get costlier from January 2023

2023இல் ஆடி, பென்ஸ் உள்ளிட்ட பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன.

2023 ஆம் ஆண்டில் புதிய காரை வீட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டால், கூடுதல் பணத்தை கொடுக்க தயாராகுங்கள். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பதாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடைகளாலும் இந்தியாவில் உள்ள டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, கியா மற்றும் ஆடி உள்ளிட்ட பல வாகன உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தங்கள் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ முழுவதும் விலை உயர்வை அறிவித்துள்ளனர்.

Advertisment

மாருதி சுஸுகி

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி விலை உயர்வை அறிவித்துள்ளது. இருப்பினும், மாடலைப் பொறுத்து உயர்வு மாறுபடும்.
தற்போது, நிறுவனத்தின் PV போர்ட்ஃபோலியோவில் Ignis, S-Presso, Swift, Wagon R, Alto, Alto K10, Baleno, Brezza, Celerio, Ciaz, Dzire, Eeco, Ertiga, Grand Vitara மற்றும் XL6 ஆகியவை விலை உயர்வு பட்டியலில்உ ள்ளன.

கியா

தென் கொரிய உற்பத்தி நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோ முழுவதும் ரூ.50,000 வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு மூலப்பொருள் மற்றும் தளவாடச் செலவுகள் அதிகரிப்பதே காரணம் என நிறுவனம் கூறியுள்ளது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் ஆனது ஒரு ரேஞ்ச் அளவிலான விலை உயர்வை அறிவித்துள்ளது. அப்போது, மேம்படுத்தல் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறியுள்ளது.
தற்போது, கார் தயாரிப்பாளர் Tigor, Tigor EV, Tiago, Tiago EV, Punch, Altroz, Safari, Harrier, Nexon மற்றும் Nexon EV ஆகியவற்றை விற்பனை செய்கிறது.

ஹூண்டாய்

நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது, ஆனால் உயர்த்தப்பட்ட தொகையை இன்னும் வெளியிடவில்லை.
இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் வரிசையில் வென்யூ, வெர்னா, க்ரெட்டா, அல்காசர், டக்சன், கோனா ஈவி, ஆரா, ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகியவை அடங்கும்.

ஹோண்டா

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம், அதன் கார்கள் முழு வரம்பிலும் ரூ.30,000 வரை விலை உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது, நிறுவனம் Amaze, City (4th-gen), City (5th-gen), WR-V மற்றும் Jazz ஆகியவற்றை வழங்குகிறது.

மற்றவைகள்

Citroen அதன் C3 மற்றும் C5 SUVகள் ஜனவரி 2023 இல் 1.5 முதல் 2 சதவீதம் வரை விலை உயரும் என்று அறிவித்துள்ளது.
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவை முறையே 1.7 சதவீதம் மற்றும் 5 சதவீதம் விலை உயர்வை அறிவித்துள்ளன.

MG மோட்டார்ஸ் அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ முழுவதும் ரூ.90,000 விலை உயர்வை அறிவித்துள்ளது, ஜீப் எஸ்யூவிகள் 2 முதல் 4 சதவீதம் வரை விலை அதிகரிக்கும்.
வோக்ஸ்வேகன் மற்றும் ரெனால்ட் நிறுவனங்களும் விலை உயர்வுகளை அறிவித்துள்ளன, ஆனால் எவ்வளவு என்பதை வெளியிடவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Car
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment