Advertisment

வருமான வரி இணையதளம் புதுப்பிப்பு: புதிய அம்சங்கள் என்ன?

புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை ‘சிந்தன் ஷிவிர்’ நிகழ்ச்சியில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவர் நிதின் குப்தா தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
New Update
CBDT launches revamped website of I-T department

CBDT புதுப்பிக்கப்பட்ட இணையதளம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

வருமான வரித்துறையானது பயனாளர்களுக்கு ஏற்ற இடைமுகம், மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய தொகுதிகள் கொண்ட புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை சனிக்கிழமை (ஆக.28) அறிமுகப்படுத்தியது.

Advertisment

இந்த புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை, உதய்பூரில் உள்ள வருமான வரி இயக்குநரகம் ஏற்பாடு செய்திருந்த ‘சிந்தன் ஷிவிர்’ நிகழ்ச்சியில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவர் நிதின் குப்தா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து CBDT அறிக்கையில், “வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்துடன் வேகத்தை தக்கவைக்கவும், வருமான வரித்துறை தனது தேசிய இணையதளமான 'www.incometaxindia.gov.in'-ஐ புதுப்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இணையதளம், மொபைலுக்கு ஏற்ற தளவமைப்புடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் புதிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளுடன் உள்ளடக்கத்திற்கான ‘மெகா மெனு’ உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Income Tax
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment