சிமெண்ட், கம்பிகளின் திடீர் விலை உயர்வால், கட்டுமானப் பணிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாக கட்டுமானத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை0 விலை உயர்வு சொந்த வீடு கட்டவேண்டும் என்ற நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கனவு கேள்விக்குறியாகி உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிமென்ட் மூட்டை ரூபாய் 480ல் இருந்து 520 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே மாதிரி கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பி விலை ஒரு டன் 76,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல, வீட்டுக்கான 'ஹார்டுவேர் பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலையும் 30-50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சிமெண்ட், கம்பி, ஹார்ட்வேர், எலட்ரிக்கல் பொருட்களின் திடீர் விலை உயர்வு கட்டுமானத்துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிமெண்ட், கம்பி ஆகிய கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், கட்டடம் கட்டும் பணியில் சதுர அடியின் விலை அதிகரித்துள்ளது. இதனால், கட்டுமானத் துறையினர் மட்டுமல்லாமல், சொந்த சொந்த வீடு கட்டும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் சொந்த வீடு கனவு கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் தொய்வடையும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையில், புறநகர்ப் பகுதிகளில் லே-அவுட்டுகள், தனிவீடுகள், அபார்ட்மெண்ட்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் மட்டும் கட்டுமானத் துறை தொழிலை நம்பி 1.50 லட்சம் கட்டுமானப் பணி தொழிலாளர்கள் உள்ளதாக கட்டுமானத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கோவையில் உள்ள ‘கிரெடாய்’ அமைப்பின் கிளை தலைவர் குகன் இளங்கோ ஊடகங்களிடம் கூறுகையில், “இரும்பு, சிமென்ட் விலை உயர்வால், கட்டடம் கட்டும் பணியில் சதுர அடிக்கு ரூ.300 முதல் ரூ.400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து கட்டுமானத் தொழில் மீண்டும் வரும் நேரத்தில் கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வு மீண்டும் சரிவை ஏற்படுத்தும் என்பது வாடிக்கையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. கட்டுமான நிறுவனங்கள் ஜிஎஸ்டியை (இன்புட் கிரெடிட்) திரும்பப் பெற முடியாது என்பதால் ரியல் எஸ்டேட் துறைக்கு வரி மேல் வரியாக மாறியுள்ளது. எனவே, செலுத்திய வரியை திரும்பப் பெறும் வசதியை மீண்டும் அளித்து மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல, அகில இந்திய கட்டுமான கழக கோவை மையத்தின் முன்னாள் தலைவர் சிவராஜன் ஊடகங்களிடம் கூறுகையில், “கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வால் கோவையில் கட்டுமானத் தொழில் ஸ்தம்பித்துள்ளது. விலை உயர்வால், 30-40 சதவீதம் வரை கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. இந்த திடீர் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், கொத்தனார், சித்தாள் உள்ளிட்டோருக்கான கூலியும் உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.
சிமெண்ட், கம்பி, ஹார்ட்வேர் ஆகிய கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், கட்டடம் கட்டும் பணியில் சதுர அடியின் விலை அதிகரித்துள்ளது. இதனால், சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் ஆசை கனவாகும் கவலை ஏற்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"