cement price Tamil News: சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் ராம்கோ சிமெண்ட்ஸ், இம்மாதம் முதல் தென்மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் சிமெண்ட் முட்டையின் விலையை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் ஒரு மூடை சிமெண்ட்க்கு ரூ.20 முதல் ரூ.25 வரை விலை உயர்த்த இருப்பதாகவும், எரிபொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு தான் இந்த விலை உயர்வு என்றும் அந்த நிறுவன அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம்
இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றால் நாட்டில் கட்டமைப்பு வேலைகள் நடைபெறவில்லை. தற்போது தொற்றின் தாக்கும் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உள்கட்டமைப்பு திட்டங்கள் அதிகரித்துள்ளது. இதனால் சிமெண்ட்டின் தேவையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.
ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி தற்போது 10% இருப்பதாகவும், அடுத்த நிதி ஆண்டில் நிறுவனம் 15% எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம், 2026ம் நிதியாண்டிரகுள் நிகரக் கடனற்றதாக மாறத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு நிதி நிலவரப்படி, நிறுவனத்தின் கடன் ரூ.3,800 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ500 கோடியை திருப்பிச் செலுத்துவதற்கான திட்டமிடப்பட்டுள்ளது.

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, கர்நாடகாவில் ரூ300-350 கோடியில் 1-1.5 mtpa அரைக்கும் திறன் கொண்ட ஒரு யூனிட்டை நிறுவ திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இவை தவிர, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனம் ரூ1,200-1,300 கோடி மதிப்பில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் கர்நாடகாவில் சுண்ணாம்பு சுரங்கத்திற்கான ஏலத்தை அடிப்படை விலையில் 25% பிரீமியத்தில் வென்றது. இது சமீபத்திய ஏலங்களை விட குறைவாகும். இந்த சுரங்கங்கள் மாநிலத்தில் வரும் ஒருங்கிணைந்த ஆலைக்கு பயன்படுத்தப்படலாம். மகாராஷ்டிராவில் உள்ள அரைக்கும் யூனிட் வந்தவுடன் அதை ஊட்டவும் பயன்படுத்தலாம் என்று ராம்கோ சிமெண்ட்ஸ் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil