பொதுத்துறை வங்கியான, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 1911 ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை தற்போது உயர்த்தியுள்ளது.
இந்த புதிய விகிதங்களின்படி ரூபாய் இரண்டு கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு சாதாரண மக்கள் 7 சதவீதத்திலும் மூத்த குடிமக்கள் 7.50 சதவீதத்திலும் வட்டி விகிதத்தை பெறுவார்கள்.
இந்த புதிய வட்டி விகிதங்கள் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகால ஃபிக்சட் டெபாசிட் முதலீடுகளுக்கு வழங்கப்படுகிறது.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வட்டி விகிதங்கள்
7 முதல் 4 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கு, வங்கி 3.50% வட்டி விகிதத்தையும், 15-45 நாட்களில் முதிர்ச்சியடைபவர்களுக்கு, 3.75% வட்டி விகிதத்தையும் வங்கி தற்போது வழங்குகிறது.
46-59 நாள் டெபாசிட்களுக்கு 4.50%, 60-90 நாள் முதலீடுகளுக்கு 4.75% வட்டி விகிதங்களும் கிடைக்கும். அதே நேரத்தில், 91-179 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இப்போது 5.00% ஆகவும், 180-270 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இப்போது 6.00% ஆகவும் இருக்கும்.
3, 5 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட்
தொடர்ந்து, 271-364 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, வங்கி இப்போது 6.25% வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது, மேலும் 1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான கால வைப்புகளுக்கு 6.75% வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
மேலும், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 7.00% வட்டி விகிதம் கிடைக்கும்.
மூன்று முதல் ஐந்து ஆண்டு வைப்புகளுக்கு 6.50% வட்டி கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல், பத்து ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.25% வட்டி கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“