ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2022-23 நிதியாண்டுக்கான இந்திய ரயில்வேயில் தகுதியான அரசிதழ் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (PLB) வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
"ரயில்வே ஊழியர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசு 11,07,346 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1968.87 கோடி தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது" என்று மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ட்ராக் மெயின்டெய்னர்கள், லோகோ பைலட்கள், ரயில் மேலாளர்கள் (பாதுகாவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பிற குரூப் 'சி' ஊழியர்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். அதேநேரம், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (RPSF) பணியாளர்கள் இந்த போனஸ் ஒதுக்கீட்டில் உள்ளடக்கப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“