Advertisment

14 பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; தமிழக காற்றாலை திட்டத்திற்கும் அனுமதி

14 பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; 1.5 மடங்கு கொள்கையின்படி உயர்வு; தமிழக கடலோர காற்றாலை திட்டத்திற்கும் கேபினெட் அனுமதி

author-image
WebDesk
New Update
paddy field work

14 பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) பரிந்துரைகளின் அடிப்படையில், 14 காரிஃப் (கோடை) பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

செய்தியாளர் சந்திப்பில் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2024-25 காரிஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5.35 சதவீதம் உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.2,300 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

2018 யூனியன் பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலை உற்பத்திச் செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் ஒரு தெளிவான கொள்கை முடிவை எடுத்திருப்பதாகக் கூறிய அஷ்வினி வைஷ்ணவ், இந்த கொள்கை சமீபத்திய குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்விலும் பின்பற்றப்பட்டது என்றார்.

ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நெல் ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதாரண ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.117 உயர்த்தப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.2,300 ஆகவும், 'ஏ' கிரேடு ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,320 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதும் எடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை முடிவு இது என்று அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இதற்கிடையில், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிகபட்ச முழுமையான அதிகரிப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மற்ற முடிவுகளில், 7,453 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் 1 ஜிகாவாட் கடலோர காற்றாலை ஆற்றல் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் வாதவனில் அனைத்து வானிலை கிரீன்ஃபீல்ட் டீப்டிராஃப்ட் மேஜர் துறைமுகத்தை மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 76,200 கோடி செலவில் கட்டப்படும் இத்துறைமுகம் முடிவடைந்ததும் உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும்.

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ரூ.2,869.65 கோடி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் உள்ள விமான நிலையத்தின் வளர்ச்சியில் புதிய முனையக் கட்டிடம் கட்டுதல், ஏப்ரன் மற்றும் ஓடுபாதை விரிவாக்கம், இணையான டாக்ஸி டிராக் மற்றும் பிற தொடர்புடைய பணிகள் அடங்கும் என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

2024-25 முதல் 2028-29 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2254.43 கோடி மொத்த நிதிச் செலவீனத்துடன், உள்துறை அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கும் (NFIES) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

msp Cabinet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment