Advertisment

நடிகை ராஷ்மிகா போலி வீடியோ: சமூக ஊடக தளங்களுக்கு டீப்ஃபேக் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு ஏ.ஐ - டீப்ஃபேக்குகள் மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கத்தை 24 மணி நேரத்திற்குள் அகற்றுவதற்கான அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.

author-image
WebDesk
Nov 08, 2023 07:50 IST
New Update
deepfake video

நடிகை ராஷ்மிகா போலி வீடியோ: சமூக ஊடக தளங்களுக்கு டீப்ஃபேக் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்

செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்களின் சாத்தியமான பயன்பாடு தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், பல்வேறு சமூக ஊடக தளங்களின் தலைமை இணக்க அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முன்னதாக அறிவுறுத்தல்களை வழங்கியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Centre issues advisory to social media platforms over deepfakes after viral ‘Rashmika Mandanna’ video

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு செயற்கை நுண்ணறிவு - டீப்ஃபேக்குகள் மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கத்தை 24 மணி நேரத்திற்குள் அகற்றுவதற்கான அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலான ஒரு நாள் கழித்து இந்த அறிவுரை வந்துள்ளது. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த ஆண்டு பிப்ரவரியில் சமூக ஊடக தளங்களுக்கு இதேபோன்ற அறிவுறுத்தல்களை வழங்கியது.

அரசாங்க வட்டாரங்கள் கருத்துப்படி ஆன்லைன் தளங்கள் பின்பற்ற வேண்டிய தற்போதைய சட்ட விதிகளை இந்த அறிவுறுத்தல் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66டி பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டபடி கணினி ஆதாரங்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் ஏமாற்றினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப விதிகள் பிரிவு 3(2)(b) இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் சமூக ஊடக தளங்கள் ஆள்மாறாட்டம் செய்யும் தன்மையில் உள்ள உள்ளடக்கத்தை புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். 

ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய டீப்ஃபேக் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்துகொண்டு லிப்டில் நுழைகிறார். அதில், ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை இணைத்து பரப்பப்பட்டது. உண்மையில் இந்த வீடியோ பிரிட்டிஷ்-இந்திய சமூக ஊடகத்தில் தாக்கத்தை செலுத்துபவர்கள் செய்தது. இந்த வீடியோ கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டது.



இந்த வீடியோ வைரலானதையடுத்து, நடிகர் அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் X-ல்,  “டீப்ஃபேக்குகள் மிகவும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்கலாக ஆன்லைன் தளங்களால் கையாளப்பட வேண்டும்” என்று கூறினார்.

வைரலான டீப்ஃபேக் வீடியோ குறித்து எதிர்வினையாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா, “நான் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளேன், இதுபோன்ற வீடியோக்கள் தனக்கு மட்டுமல்ல, தவறாக பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பத்தால், இன்று பெரிய தீங்குகளுக்கு ஆளாக நேரிடும் நம் ஒவ்வொருவருக்கும் பயமாக இருக்கிறது” என்று எக்ஸ்-ல் ராஷ்மிகா மந்தனா கூறினார். 

ஆன்லைன் தளங்கள் ஏற்கனவே விரோதமான இடமாக இருக்கும் பெண்களுக்கு டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் சிக்கல்கள் நிச்சயமாக பெரியதாக இருக்கும் என்று இந்த குறிப்பிட்ட வீடியோ எடுத்துக்காட்டுகிறது. டீப்ஃபேக்குகள் இணையத்தில் துன்புறுத்தப்படும் வழிகளில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கின்றன.

தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் பல்வேறு சமூக ஊடக தளங்களின் தலைமை இணக்க அதிகாரிகளுக்கு பிப்ரவரியில் அறிவுறுத்தல்களை வழங்கியது. ஏ.ஐ-ஆல் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக்குகளின் சாத்தியமான பயன்பாடு பற்றிய அறிக்கைகளைப் பெற்ற பிறகு, டீப்ஃபேக்குகள் அவதுறான உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் மக்களைக் கையாளுகிறது என்று கூறியது. 

தகவல் பரிமாற்ற தளத்தில் அதிகரித்து வரும் AI- தலைமையிலான தவறான தகவல்களின் காரணமாக ஒரு செய்தியை முதலில் தோற்றுவித்தவர் பற்றிய விவரங்களை WhatsApp பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு தெரிவித்திருந்தது.



இதற்கு அடிப்படை வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் அரசியல்வாதிகளின் பல டீப்ஃபேக் வீடியோக்கள் காரணம் ஆகும். மேலும், தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகள், 2021-ன் கீழ் செய்தி அனுப்பும் நிறுவனத்திற்கு, அந்த தளத்தில் வீடியோக்களை முதலில் பகிர்ந்த நபர்களின் அடையாளத்தைத் கண்டறியும் உத்தரவை அனுப்பும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment