பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தும் வகையில் வருமான வரிச் சலுகைகளைப் பெறாத பெரும்பாலான தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் வெள்ளிக்கிழமை (2022 டிச.31) உயர்த்தியது.
இந்த நிலையில், என்எஸ்சி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) ஆகியவை மூலம் வருமானம் ஈட்டுவதற்கு வரி விதிக்கப்படும்.
பொதுவாக, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும். திருத்தத்தின் மூலம், தபால் நிலையங்களில் ஒரு வருட கால வைப்புத்தொகை 6.6 சதவிகிதமும், இரண்டு ஆண்டுகளுக்கு 6.8 சதவிகிதமும், மூன்று ஆண்டுகள் 6.9 சதவிகிதமும் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு 7 சதவிகிதமும் வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமானது ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 40 அடிப்படைப் புள்ளிகள் 8 சதவிகிதம் அதிகமாக வருமானம் ஈட்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிஷான் விகாஸ் பத்ரா பொறுத்தவரை, அரசாங்கம் வட்டி விகிதங்களை 7.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது, இதன் மூலம் 120 மாதங்களில் முதிர்ச்சியடையும். தற்போது, KVP 123 மாத முதிர்வு காலத்துடன் 7 சதவீத விகிதத்தை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/