ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கீழ் பெர்த் ஒதுக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. தற்போதுள்ள நடைமுறைகளுடன் புதிய விதிகளையும் பின்பற்றப் போவதாக இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது.
அதன்படி, ரயில்களில் லோயர் பெர்த் ஒதுக்கும் போது கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
வயதான பெண்களோ, கர்ப்பிணிகளோ கீழ் பெர்த் இருக்கைகளில் பயணித்தால், நடு படுக்கையில் இருப்பவர்கள் இரவு 10 மணிக்குப் பிறகுதான் தூங்க வேண்டும். அதுவரை லோயர் பெர்த்தில் இருப்பவர் உட்காரலாம். அதாவது 10 மணி வரை நடுப் படுக்கையைத் தூக்கக் கூடாது.
கீழ் பெர்த்தில் இருப்பவர் 10 மணிக்கு முன் தூங்க சம்மதித்தால் நடு பெர்த்தில் உள்ள பயணிகள் சுதந்திரமாக தூங்கலாம். இல்லாவிட்டால் 10 மணி வரை காத்திருந்து அதன் பிறகுதான் மிடில் பெர்த்தில் தூங்குங்கள்.
இந்த விதிமுறைகளால் அப்பர் பெர்த் பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எப்போது வேண்டுமானாலும் மேல் பெர்த்தில் போய் படுத்துக் கொள்ளலாம். ஆனால், 10 மணிக்கு மேல் விளக்கு எரியக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.
லோயர் பெர்த் ஒதுக்கீடு என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் பயணிகளுக்கும், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகளுக்கும், ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட கீழ் பெர்த்தை பெறுவதை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“