ஆதார் அட்டை அனைத்து முக்கிய விவகாரங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, பான் அட்டை, யு,ஏ.என் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை எண்ணைச் சேர்ப்பது கட்டாயம் ஆகும்.
ஏனென்றால், ஆதாரில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், வயது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். ஆனால், அத்தகைய முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணத்தில் ஏதேனும் விவரத்தை மாற்றம் செய்ய வேண்டும் எனில் ஆதார் சேவை மையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், சில மாற்றங்களை நீங்களே செய்திடும் புதிய மாற்றத்தை UIDAI கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து UIDAI தனது ட்விட்டர் பக்கத்தில், " ஆதாரில் மாற்றங்களை மேற்கொள்ள Aadhaar Self-service Update Portal என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெற https://ssup.uidai.gov.in/ssup/ என்ற லிங்கிற்கு செல்ல வேண்டும். பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற தகவல்களை அப்டேட் செய்ய அதற்குரிய ஆவணங்களை நீங்கள் அப்லோடு செய்ய வேண்டும். இதற்கு கட்டண தொகையாக ரூபாய் 50 செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை மாற்றலாம்" என பதிவிட்டுள்ளது.
எத்தனை முறை ஆதாரில் மாற்றம் கொள்ளலாம்
ஆதாரில் தகவல்களை மாற்றிக்கொள்ள UIDAI வெளியிட்டுள்ள வசதியை, எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற எண்ணிடக் கூடாது. ஆதாரில் பிறந்ததேதியை ஒரு முறை மட்டுமே மாற்றிட முடியும். பாலினம், பெயரை, இரண்டு முறை மாற்றிக்கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்
ஆன்லைனில் ஆதாரில் விவரங்களை மாற்றிட, சில ஆவணங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பெயர்: ஏதேனும் அடையாள அட்டையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பிறந்த தேதி: இதற்கு பிறப்பு சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பாலினம்: மொபைல் ஓடிபி வெரிஃபிகேஷன்
- முகவரி: வீட்டு முகவரி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
- மொழி மாற்றம்: ஆவணங்கள் தேவையில்லை.
மேலே குறிப்பிட்ட ஆவணங்களைத் தவிர, ஆன்லைனில் மாற்றங்கள் செய்திட ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் நம்பர் அவசியமாகும். அதற்கு, வரும் ஓடிபி பாஸ்வேர்ட் தான் அனைத்து அப்டேட்களுக்கும் கடைசி கட்ட பிராசஸ் ஆகும்.
ஆதாரில் மாற்றம் செய்வது எப்படி?
- முதலில் UIDAIஇன் https://ssup.uidai.gov.in/ssup/ தளத்திற்குச் செல்ல வேண்டும்.
- அங்கு ‘proceed to update Aadhaar’கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக, ஆதார் நம்பரை பதிவிட்டு captcha வெரிபிகேஷன் செய்ய வேண்டும்.
- இறுதியாக, Send OTP கிளிக் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து, செல்போனுக்கு வரும் 6 டிஜிட் நம்பரை பதிவிட வேண்டும்.
- தற்போது, ஆதாரில் மாற்ற வேண்டிய தகவல்களை முடிவு செய்து, proceed கொடுக்க வேண்டும்.
- அதற்கு தேவையான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்
- மீண்டும் ஒருமுறை மாற்றிய விவரத்தை சரிபார்த்துவிட்டு, submit கொடுக்க வேண்டும்.
- தற்போது திரையில் தோன்றும் update request number (URN) உபயோகித்து, உங்களின் சேஞ்சிங் பிராசஸ் எந்தளவில் உள்ளது என்பதை பார்த்திட முடியும்.
இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 1947 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது help@uidai.gov.in தளத்தில் எழுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் நம்பர் உள்ளிட்ட ஒரு சில அப்டேட்களுக்கு மட்டுமே நீங்கள் ஆதார் சேவை மையத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.