ஐசிஐசிஐ வங்கியின் சிஓஓ- வாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சார் தலைமை பதவியின் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக ரூ.3,250 கோடி கடன் வழங்கிய தொடர்பாக ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கொச்சார் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது.வீடியோக்கான் நிறுவனம் இந்த கடனை வாங்கி 5 வருடங்களுக்கு மேலாகியும் ரூ.2800 கோடிக்கு மேல் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளது. பின்பு, இந்த கடன் வாரக்கடனாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பெருமளவில் உதவியது சந்தா கொச்சார் தான் என்றும், அவர் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கிய கடனில் பெரும்பாலான பகுதி வாராக் கடனாக மாறியுள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகின. இந்த சர்ச்சைக்கு பின்னால், சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரி, அவரது மைத்துனர் என பலரின் பெயர்கள் அடிப்பட தொடங்கின. இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வங்கி நிர்வாகம் இந்த மோசடி குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் வீடியோகான் நிறுவனத்தின் கடன் வாரக்கடனாக அறிவிக்கப்பட்டதற்கு வங்கி நிர்வாகம் எடுத்த முடிவே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் கள ஆய்வு மூலம் அம்பலப்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சார் பொதுநிகழ்ச்சிகள், விருதுகளில் கலந்துக் கொள்ளலாம் மீடியாவை தவிர்த்து வந்தார். மேலும், அவர் பல நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் தகவல் வெளிவந்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் தான் வங்கி நிர்வாகம் சிஇஓ சந்தா கொச்சார் தனிப்பட்ட காரணத்திற்காக விடுமுறையில் சென்றுள்ளதாக கூறியது.
ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா?
அதன் பின்பு, இந்த ஊழல் புகார் குறித்து விசாரிக்கவும் தனி குழு ஒன்று வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டது.இதுதொடர்பாக ஆலோசிக்க வங்கியின் இயக்குநர் குழு நேற்று(18.6.18) கூடியது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி ``ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த பிரத்யேக குழு அமைக்கப்படும்.என்றும், இந்தக் குழு விசாரணை நடத்தி முடிக்கும் வரை சந்தா கொச்சார் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்கபடுகிறார்” என்றும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை வலையில் சிக்கிய சந்தா கொச்சார்
இதனைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சந்தீப் பாக்ஷி இன்று பதவியேற்கிறார். சந்தீப் பாக்ஷி ஐசிஐசிஐ வங்கியின் முழுநேர சிஓஓவாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் பாக்ஷி ஐசிஐசிஐ புரூடன்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.