வீடு மாறி விட்டீர்களா… ஆன்லைனில் ஆதார் முகவரியை மாற்றுவது எப்படினு தெரிஞ்சுக்கோங்க!

வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை எளிதாக மாற்றும் முறையை இச்செய்தி தொகுப்பில் பாருங்கள்

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் என்பது மிகவும் கட்டாயமான தனிநபர் அடையாள ஆவணமாகும். வங்கி, நிலச் சொத்து மற்றும் அரசு அலுவலகம் தொடர்பான பணிகளுக்கு ஆதார் அட்டை அவசியமாகும்.

சில சமயங்களில் வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்தால், அப்போது ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அச்சமயத்தில், முகவரியை மாற்ற ஆதார் மையத்திற்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டியதில்லை

கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றி, வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் உங்கள் முகவரியை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

  • முதலில் UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in க்குச் செல்ல வேண்டும்
  • அடுத்து, ஹோம்பேஜ்ஜில் உள்ள ‘MY Aadhaar’ பகுதிக்குச் செல்லவும்
  • பின்னர் தோன்றும் திரையில், ‘Update Your Aadhaar’ என்ற பகுதியை காண்பீர்கள், இதில் நீங்கள் Update Demographics Data Online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, Proceed to Update Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • ஆதார் அட்டை எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிவிட்டப்பிறகு, Send ஓடிபி கொடுக்க வேண்டும்.
  • உங்கள் மொபைலுக்கு வரும் 6 டிஜிட் எண்ணை, திரையில் கேட்கப்பட்டுள்ள இடத்தில் பதிவிட வேண்டும்.
  • தொடர்ந்து, நீங்கள் Update Demographics Data ஆப்ஷனை கிளிக் செய்து, தகவலை பதிவிட்டு பூர்த்தி செய்ய வேண்டும்
  • அனைத்து இடங்களிலும் கேட்கும் இடங்களை பூர்த்தி செய்துவிட்டு, Proceed என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இதற்குப் பிறகு, சரியான ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைச் சமர்ப்பிக்கவும். முகவரி மாற்றுவதற்கு, சரியான ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும். Preview ஆப்ஷன் மூலம் நீங்கள் மாற்றிய முகவரி சரியாக உள்ளதா என்பதை பார்க்கலாம்.

இறுதியாக சமர்ப்பித்த பிறகு, அப்டேட் ரெக்வெஸ்ட் நம்பர் (URN) கிடைக்கும். அதன் உதவியுடன் UIDAI இணையதளத்தில் அப்டேட் நிலையைச் சரிபார்க்கலாம்.

குறிப்பு: எத்தனை முறை வேண்டுமானாலும் . ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Changing address in aadhaar card here how to do it online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express