பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலும் அண்மை காலமாக கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக செய்திகள் வெளியாகின.
இதை சிலர் நம்ப மறுத்தாலும் இதில் உண்மை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
கூகுள் பே அல்லது போன் பே உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
அதாவது 90 முறைக்கு மேலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு போர்ட்ஃபோலியோ கட்டணங்கள் (portfolio charges) என்ற பெயரில் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
அதாவது, 90 பரிவர்த்தனைக்கு பின்னரான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.2.25 மற்றும் வரிகள் இதற்கு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
அதாவது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கிட்டத்தட்ட ரூ.2.65 காசுகள் பிடிக்கப்படும். ஆகவே உங்களது வங்கிகளில் portfolio charges உள்ளனவா என செக் செய்த பின்பு அதிகப்பட்ச பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/