Advertisment

ATM Transaction Limit: டெபிட் கார்டு பயனாளியா? உங்கள் பணம் வீணாக செலவாகிறதா?

Charges on ATM Transaction After Monthly Limit: பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை செக் செய்ய ரூ.17 கட்டணம் வசூல் செய்யப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ATM Transaction Limit: டெபிட் கார்டு பயனாளியா? உங்கள் பணம் வீணாக செலவாகிறதா?

Charges Levied by Banks After Monthly ATM Transaction Limit Exhaustion: குறிப்பிட்ட பணப் பரிவர்த்தனைகளை கடந்து டெபிட் கார்டுகளை ஏடிஎம்மில் ஸ்வைப் செய்பவரா நீங்கள்? அதன் மூலம் தேவையில்லாமல் உங்கள் பணத்தை இழக்கிறீர்களா? அப்படியெனில், இந்த தகவல் நிச்சயம் உங்களுக்குத் தான். எஸ்பிஐ(SBI), ஹெச்டிஎஃப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) வங்கிகள் டெபிட் கார்டு பணப் பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு கட்டணங்கள் வசூலிக்கின்றன என்ற விவரங்கள் இதோ,

Advertisment

எஸ்பிஐ:

எஸ்பிஐ ஏடிஎம்-களில் பரிவர்த்தனை இலவசம்.

மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில், மாதத்திற்கு 5 பரிவர்த்தனை(சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும்) இலவசம். ஐந்து முறையை தாண்டும் போது, கட்டணம் வசூலிக்கப்படும்.

நிதி பரிமாற்றங்களுக்கு, வாடிக்கையாளர்கள் ரூ.17(சேவை வரி உட்பட) செலுத்த வேண்டும். நிதி அல்லாத பரிமாற்றங்களுக்கு ரூ.6 கட்டணம்(சேவை வரி உட்பட) வசூலிக்கப்படும்.

சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு - பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை செக் செய்ய ரூ.17 கட்டணம் வசூல் செய்யப்படும். ஏடிஎம்மில் பணம் எடுத்தால் வரி உட்பட ரூ.169 வசூலிக்கப்படும்.

பணத்தை சேமிக்கவும் சரி, சேவை கட்டணமும் சரி வங்கியை விட அம்சமான அஞ்சல் சேமிப்பு!

ஹெச்டிஎஃப்சி:

ஹெச்டிஎஃப்சி ஏடிஎம்மில் பேலன்ஸ் செக் செய்யவும், பணம் எடுக்கவும் கட்டணம் இலவசம். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பேலன்ஸ் செக் செய்ய கட்டணம் கிடையாது. அதுமட்டுமின்றி, ஹெச்டிஎஃப்சி அல்லாத ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகள் இலவசமே. ஐந்து முறையை தாண்டும் போது, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். (பரிவர்த்தனை லிமிட் ரூ.10,000)

சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு - பேலன்ஸ் செக் செய்ய ரூ.15 கட்டணமும், பணம் எடுக்க ரூ.110 கட்டணமும் வசூலிக்கப்படும்.

உலகின் வேறு எந்த இடத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யும் போது, பரிவர்த்தனை ரத்தானால் அதற்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.

ஐசிஐசிஐ:

எஸ்பிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகளைப் போல, தனது வங்கி ஏடிஎம்மில் இலவச பரிவர்த்தனைகளை ஐசிஐசிஐ தருகிறது. இருப்பினும், ஒரு மாதத்திற்கு நிதி மற்றும் நிதியல்லாத ஐந்து பணப்பரிவர்த்தனைகள் மட்டும் இலவசமாக தருகிறது.

அதன்பிறகு, ஒவ்வொரு நிதி பரிமாற்றத்திற்கும் ரூ.20 கட்டணமும், நிதியில்லா ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூ.8.50 கட்டணமும் வசூலிக்கப்படும்.

Sbi Icici Bank Atm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment