வங்கிக் கணக்குகளில் இருந்து ஆன்லைன் மூலம், பணப் பரிவர்த்தனை செய்வதற்கு பயன்படும் ஒரு வழித்தடமே IMPS (Immediate Payment Service ) ஆகும். இதன் மூலம், நீங்கள் எந்த நாளானாலும், எந்த நேரத்திலும் பணத்தை அனுப்பலாம். (விதிமுறைக்கு உட்பட்ட சில விடுமுறை நாட்களை தவிர்த்து) உடனடியாக, அது பணம் எடுப்போரின் அக்கவுண்ட்டில் சேர்ந்துவிடும். இருப்பினும், இந்த வழித்தடம் மூலம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே அனுப்ப முடியும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கி ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ ஆகிய தனியார் வங்கிகள் வரை IMPS மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ரூ.1 முதல் ரூ.15 வரை கட்டணம் வசூலிக்கின்றன.
IMPS மூலம் பணம் அனுப்ப SBI, HDFC, ICICI, Axis ஆகிய வங்கிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றன என்ற தகவலை இங்கே பார்ப்போம்.
SBI வங்கி வசூலிக்கும் IMPS கட்டணம்:
1000 ரூபாய் வரை கட்டணம் இல்லை.
ரூ.1,001 - ரூ. 10,000 ரூ.1 + GST
ரூ.10,001 - ரூ. 1,00,000 ரூ. 2 + GST
ரூ. 1,00,001 - ரூ. 2,00,000 ரூ. 3 + GST
(எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com தளத்தில் உள்ள தகவலின் படி)
HDFC வங்கி வசூலிக்கும் IMPS கட்டணம்:
ரூ. 1 - ரூ. 1 லட்சம் ரூ. 5 + GST
1 லட்சம் - 2 லட்சம் ரூ. 15 + GST
(HDFC வங்கியின் hdfcbank.com தளத்தில் உள்ள தகவலின் படி)
ICICI வங்கி வசூலிக்கும் IMPS கட்டணம்:
ரூ. 10,000 வரை ரூ. 5 + GST
ரூ. 10,000 - ரூ. 1 லட்சம் ரூ. 5 + GST
ரூ.1 லட்சம் - 2 லட்சம் Rs. 15 + GST
(ICICI வங்கியின் icicibank.com தளத்தில் உள்ள தகவலின் படி )
Axis வங்கி வசூலிக்கும் IMPS கட்டணம்:
ரூ.1,000 வரை - ரூ. 2.50 + GST
ரூ. 1,000 - ரூ. 1,00,000 ரூ. 5 + GST
ரூ. 1,00,000 - ரூ. 2,00,000 ரூ. 15 + GST
(Axis வங்கியின் axisbank.com தளத்தில் உள்ள தகவலின் படி ).
இவ்வாறாக, நீங்கள் அனுப்பும் பணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.