இரு சக்கர வாகனம் வாங்க பல்வேறு வங்கிகள் கடனுதவி அளிக்கின்றன. இதற்கு, முதலில் நீங்கள் விரும்பும் டூவீலர் விலை மற்றும் உங்களுக்கு கிடைக்கும் கடன் அளவு குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
Advertisment
உங்களுக்கு கடன் உதவி அளிக்கும் நிறுவனம் முதலில் கிரெடிட் ஸ்கோர்-ஐ சோதிக்கும். அதனடிப்படையில் உங்களுக்கு 100 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை டூவீலர் லோன் கிடைக்கும். உங்களது கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால், கிட்டத்தட்ட 100 சதவீதம் வரை லோன் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீங்கள் டூவீலர் லோனுக்கு விண்ணப்பித்து, உங்களுக்க லோன் ஒதுக்கீடு செய்யப்பட்டால், அதன்பின்னர் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். நிறுவனம் கேட்கும் புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை நீங்கள் சமர்பிக்க வேண்டும்.
அந்த வகையில் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் டூவீலர் கடன் பெற்றிருந்தால், அந்தக் கடன் அளவு 3 ஆண்டுகளாக இருந்தால் நீங்கள் மாதா மாதம் கட்ட வேண்டிய இ.எம்.ஐ., தொகை குறித்து பார்க்கலாம்.
Advertisment
Advertisement
டூவீலர் லோனின் வட்டி விகிதங்கள் மற்றும் கால அளவு
வங்கி மற்றும் என்.எஃப்.சி.,
வட்டி வீதம்
இ.எம்.ஐ.,
வங்கி
பேங்க் ஆஃப் பரோடா
8.25%
ரூ.3,145
சென்டிரல் பேங்க்
9.75%
ரூ.3,215
ஜே அண்ட் கே
9.85 %
ரூ.3,220
பஞ்சாப் நேஷனல் வங்கி
10.05 %
ரூ.3,229
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
10.20%
ரூ.3,236
கனரா வங்கி
10.40%
ரூ.3,246
ஆக்ஸிஸ் வங்கி
11.00%
ரூ.3,274
எஸ்.பி.ஐ.,
11.00%
ரூ.3283
யூனியன் வங்கி
11.30%
ரூ.3288
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
11.35%
ரூ.3,290
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
11.45%
ரூ.3,295
ஹெச்.டி.எஃப்.சி.,
12.00%
ரூ.3,321
யூகோ வங்கி
12.10%
ரூ.3326
சௌத் இந்தியா வங்கி
12.45%
ரூ.3,343
பேங்க் ஆஃப் பரோடா
12.45%
ரூ.3,343
தனலட்சுமி வங்கி
12.50%
ரூ.3,345
பெடரல் வங்கி
12.50%
ரூ.3,345
கர்நாடகா வங்கி
13.10%
ரூ.3,374
கரூர் வைஸ்யா வங்கி
14.00%
ரூ.3,418
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC)
பஜாஜ் ஃபின்சர்வ்
9.25%
ரூ.3192
டாடா கேப்பிட்டல்
10.75%
ரூ.3262
ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ்
11.50%
ரூ.3298
வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் விவரம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“