Advertisment

தீபாவளி ஆஃபர்: சலுகை விலையில் ஹோம், கார் லோன்; இங்கே பாருங்க

இந்தச் சலுகையின் கீழ், பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 8.4% குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களைப் பெறலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
HDFC home loans HDFC cuts prime lending rates on home loans

பேங்க் ஆஃப் பரோடா (BoB) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) போன்ற பிற வங்கிகளும் வீட்டுக் கடன்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் சலுகைகளை அறிவித்து உள்ளன.

home loans | பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தீபாவளி 2023-ஐ கொண்டாடும் விதமாக 'தீபாவளி தமாகா 2023' என்ற புதிய சலுகையை அறிவித்துள்ளது.

மேலும், இந்தச் சலுகையின் கீழ், பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 8.4% குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களைப் பெறலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பேங்க் ஆஃப் பரோடா (BoB) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) போன்ற பிற வங்கிகளும் வீட்டுக் கடன்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் சலுகைகளை அறிவித்து உள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்கள் 8.75% வட்டி விகிதத்தில் கார் கடன்களைப் பெறலாம். அதேநேரத்தில், செயலாக்கக் கட்டணம் மற்றும் ஆவணக் கட்டணங்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டுக்கடன் 8.4% முதல் தொடங்குகிறது. மேலும், வங்கி எந்த முன்பண செயலாக்கக் கட்டணங்களையும் ஆவணக் கட்டணத்தை வசூலிக்காது.

அந்த வகையில், வீட்டுக் கடன் விண்ணப்பத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிரத்யேக இணையதளமான https://digihome.pnb.co.in/pnb/hl/-இல் சென்று சமர்பிக்கலாம்.

கார் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் PNB ONE ஆப்ஸைப் பயன்படுத்தலாம் அல்லது PNB இணையதளத்தை (https://www.pnbindia.in/) பயன்படுத்தலாம்.

கூடுதல் தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் 1800 1800/1800 2021 என்ற கட்டணமில்லா எண் மூலம் வங்கியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள PNB கிளையைப் பார்வையிடலாம்.

ஸ்டேட் பேங்ப் ஆஃப் இந்தியா

எஸ்பிஐ சிறப்புச் சலுகை செப்டம்பர் 1, 2023 அன்று தொடங்கி, டிசம்பர் 31, 2023 அன்று முடிவடைகிறது. அந்த வகையில், ஒரு SBI வாடிக்கையாளரின் CIBIL ஸ்கோர் 700 முதல் 749 வரை இருந்தால், அவர்கள் 8.7% பயனுள்ள வட்டி விகிதத்தில் டேர்ம் லோனைப் பெறலாம். இதற்கு முன்பு இது 9.35% ஆக இருந்தது.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடாவின் சிறப்பு பண்டிகை பிரச்சாரம் 'Feeling of Festival with BoB' டிசம்பர் 31, 2023 வரை அமலில் இருக்கும்.

இந்த சிறப்பு சலுகையின் கீழ், வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 8.4% இல் தொடங்குகின்றன. மேலும் வங்கியால் செயலாக்கக் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது.

கார் கடன்களை BoB வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 8.7% வட்டி விகிதத்தில் பெறலாம். கார் மற்றும் கல்விக் கடன்கள் இரண்டிற்கும், எந்தச் செயலாக்கக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Home Loans Sbi Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment