Advertisment

3 ஆண்டு டெபாசிட்; 8.60% வட்டி: இந்த 5 வங்கிகளை நோட் பண்ணுங்க!

3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8.60 சதவீதம் வரை வட்டி வழங்கும் 5 வங்கிகள் குறித்து பார்க்கலாம். பொதுத்துறை வங்கிகளும் எஃப்.டி-க்கு நல்ல வட்டி வழங்குகின்றன.

author-image
WebDesk
New Update
Bank of Baroda launches Mahila Samman Savings Certificate

3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய முதலீட்டாளர்கள் பெரும்பாலும் எஃப்டியில் முதலீடு செய்வதுதான் சேமிப்புக்கு பாதுகாப்பான தேர்வாக கருதுகின்றனர். 

காரணம் எஃப்டியில் இல் முதலீடு செய்வது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.

Advertisment

அந்த வகையில், 3 வருட எஃப்டி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதற்கிடையில், பல்வேறு வங்கிகள் 3 வருட எஃப்டிக்கு பம்பர் வட்டியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

இதில் அதிகபட்சமாக 8.60% வரை வட்டி அளிக்கும் 5 வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

எஸ்.பி.எம் வங்கி

எஸ்பிஎம் வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட எஃப்டிக்கு அதிகபட்சமாக 8.10% வட்டி அளிக்கிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கு 8.60% வரை வட்டி வழங்குகிறது.

டிசிபி வங்கி

டிசிபி வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட எஃப்டிக்கு அதிகபட்சமாக 8% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.50% வட்டியும் வழங்குகிறது.

யெஸ் வங்கி

யெஸ் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட எஃப்டிக்கு 7.75% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.25% வட்டியும் வழங்குகிறது.

டொய்ச்சு வங்கி (Deutsche Bank)

டொய்ச்சு வங்கி (Deutsche Bank) அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 3 வருட எஃப்டிக்கு  7.75% வட்டியை வழங்குகிறது, அதே சமயம், அதன் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியையும் வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment