தபால் நிலையங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக திகழ்கிறது. மக்களுக்கு நாம் சொல்ல விரும்பும் தகவல்களை கொண்டு செல்வது மட்டுமின்றி பாதுகாப்பான முதலீடு திட்டங்களையும் வழங்குகிறது. இத்திட்டங்களில் வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி கிடைப்பதால், மக்கள் அதிகளவில் டெபாசிட் செய்கின்றனர்.
இதற்கிடையில், வெறும் 5 ஆயிரம் முதலீடு செய்து லட்சங்களில் சம்பாதிக்கும் வேலை வாய்ப்பை போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது.
நாட்டில் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்கள் இருந்தாலும், அனைத்து இடங்களில் தபால் நிலையங்கள் இல்லாத காரணத்தால், இந்த பிரான்சைஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபீஸ் இரண்டு விதமான பிரான்சைஸ் திட்டத்தை வழங்குகிறது. ஒன்று, தபால் நிலைய பிரான்சைஸ், மற்றொருன்று தபால்நிலைய முகவர்கள் பிரான்சைஸ். கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வீடு வீடாக சென்று போஸ்டல் ஸ்டாம்புகள் மற்றும் எழுதுப்பொருட்களை வழங்கும் நபர் போஸ்டல் ஏஜெண்ட்டுகள் அல்லது தபால் முகவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்
போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸ் தொடங்கும் தகுதி என்ன?
- இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- 18 வயது பூர்த்தியான நபராக இருக்க வேண்டும்.
- 8ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்
- பிரான்சைஸ் தொடங்கிட, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- நீங்கள் தேர்வாகும் பட்சத்தில், இந்தியா போஸ்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட வேண்டும்
சம்பாதிக்கும் தொகை விவரங்கள்
- ரெஜிஸ்டர் போஸ்ட்டுக்கு 3 ரூபாய்
- ஸ்பீட் போஸ்ட்டுக்கு 5 ரூபாய்
- ரூ. 100 முதல் ரூ. 200 வரையில் மணி ஆர்டருக்கு ரூ. 3.50 ரூபாய்
- ரூ. 200க்கு மேற்பட்ட மணி ஆர்டருக்கு 5 ரூபாய்
1000க்கும் மேற்பட்ட புக்கிங்கள் மற்றும் ஸ்பீட் போஸ்டுகளுக்கு மாதம் 20% கூடுதல் கமிஷன். - போஸ்டல் ஸ்டேம்ப், அஞ்சல் எழுதுபொருட்கள், பணம் ஆர்டர் படிவம் ஆகியவற்றின் விற்பனைத் தொகையில் 5% தொகை கமிஷன் ஆகும்.
- வருவாய் முத்திரைகள், மத்திய ஆட்சேர்ப்புக் கட்டண முத்திரைகள் போன்றவற்றின் விற்பனை உள்ளிட்ட சில்லறைச் சேவைகளில் அஞ்சல் துறையின் வருமானத்தில் 40% தொகை கமிஷனாக கிடைக்கும்.
ஆரம்பிப்பது எப்படி?
- விண்ணப்பதாரர்கள் பிரான்சைஸ் அவுட்லெட்டில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை விவரிக்கும் வணிகத் திட்டத்துடன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்
- விண்ணப்பப் படிவத்தை தபால் நிலையத்திலிருந்து நேரடியாக பெறலாம் அல்லது இந்திய அரசின் தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- படிவம் சமர்ப்பித்த பிறகு, சமந்தப்பட்ட நபருடன் தபால் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தில் (MoA) கையெழுத்திடும்.
- நீங்கள் விண்ணப்பம் பதிவு செய்த 14 நாட்களுக்குள் தபால் கோட்ட தலைவர் உங்கள் பிரான்சைஸை உறுதி செய்துவிடுவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.