Post Office Savings Scheme | அஞ்சல சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னர் அதில் உள்ள வட்டி விகிதங்கள் குறித்து அறிந்துக் கொள்ளலாம். சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் திருத்துகிறது. நடப்பு நிதியாண்டு 2024-2025 -ன் முதல் காலாண்டிற்கான பல்வேறு அஞ்சலக திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
Advertisment
2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1, 2024 இல் தொடங்கி ஜூன் 30, 2024 அன்று முடிவடையும். நான்காவது காலாண்டில் ஜனவரி 1, 2024 முதல் மார்ச் 31, 2024 வரை அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களிலிருந்து மாறாமல் இருக்கும்.
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள்
வ.எண்
திட்டங்களின் பெயர்
வட்டி விகிதம் (%)
01
போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்
4.0%
02
1 ஆண்டு டைம் டெபாசிட்
6.9%
03
2 ஆண்டு டைம் டெபாசிட்
7.00%
04
3 ஆண்டு டைம் டெபாசிட்
710%
05
5 ஆண்டு டைம் டெபாசிட்
7.5%
06
5 ஆண்டு ஆர்.டி டெபாசிட்
6.7%
07
மூத்தக் குடிமக்கள் திட்டம்
8.2%
08
மாதாந்திர வருமான கணக்கு
7.4%
09
தேசிய சேமிப்பு சான்றிதழ்
7.7%
10
பிபிஃஎப்
7.1%
11
கிசான் விகாஸ் பத்ரா
7.5%
12
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்
7.5%
13
சுகன்யா சம்ரித்தி திட்டம்
8.2%
மதிப்பீடு எப்படி?
2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை இங்கே பார்க்கலாம்.
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் அவ்வப்போது மதிப்பீடு செய்கிறது. இதனை கணக்கிடுவதற்கான வழிமுறை ஷியாமளா கோபிநாத் கமிட்டியால் முன்மொழியப்பட்டது.
கமிட்டியின் பரிந்துரைகளின்படி, பல்வேறு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், அதே முதிர்வு காலத்துடன் கூடிய அரசுப் பத்திரங்களின் வருவாயை விட 25 முதல் 100 அடிப்படை புள்ளிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“