போஸ்ட் ஆபீஸ்; இந்த 13 திட்டங்களின் புதிய வட்டியை செக் பண்ணுங்க!
பொதுத்துறை வங்கிகளை போன்று அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு தரப்பினரும் போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
post-office-savings-scheme | ஜனவரி முதல் மார்ச் வரை முதல் காலாண்டிற்கான அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தி அறிவித்துள்ளது. சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கான (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. மேலும், மூன்று ஆண்டு கால டெப்பாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அதே வேளையில், மற்ற அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி 0 முதல் மார்ச் 31 வரை பொருந்தக்கூடிய அனைத்து 13 சிறு சேமிப்புத் திட்டங்களின் சமீபத்திய வட்டி விகிதத்தை சரிபார்க்கவும்
Advertisment
வ.எண்
திட்டங்கள்
வட்டி விகிதம்
01
போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்
4.0%
02
1 ஆண்டு டைம் டெபாசிட்
6.9%
03
2 ஆண்டு டைம் டெபாசிட்
7.00%
04
3 ஆண்டு டைம் டெபாசிட்
7.1%
05
5 ஆண்டு டைம் டெபாசிட்
7.5%
06
5 ஆண்டு ஆர்.டி டெபாசிட்
6.7%
07
மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
8.2%
08
மாதாந்திர வருமானக் கணக்கு
7.4%
09
தேசிய சேமிப்பு சான்றிதழ்
7.7%
10
பி.எஃப்
7.1%
11
கிஷான் விகாஸ் பத்ரா
7.5%
12
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ்
7.5%
13
சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்)
8.2%
(அஞ்சல சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் [ 01.01.2024 to 31.03.2024])
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், முக்கியமாக தபால் நிலையங்களால் இயக்கப்படுகிறது. இவை காலாண்டு அடிப்படையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மே 2022 முதல், ரிசர்வ் வங்கியின் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 2.5 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை உயர்த்தியதைத் தொடர்ந்து, வங்கிகளும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“