fixed-deposits | இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்கள் மத்தியில் விருப்பமான முதலீட்டு தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளது. இதற்கிடையில், தொடர்ச்சியான சந்தை எழுச்சிகள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி உள்ளன.
தற்போது முதலீடுக்கு அதிக வட்டி தரும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் முதலீடு செய்துவருகின்றனர். எனினும், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகின்றன என்பது பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை.
இருப்பினும், இந்த வங்கிகள் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 மற்றும் பல தொடர்புடைய சட்டங்களின் விதிகளுக்கு உட்பட்டவை ஆகும்.
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இவை, மூத்த குடிமக்களுக்கு 9 சதவீதம் வரை விகிதங்களை வழங்குகின்றன.
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 750 நாள்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 9.21 சதவீத உயர் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
உத்கர்ஷ் ஸ்மால் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, இரண்டு முதல் மூன்று வருட காலக்கெடுவிற்குள் முதிர்ச்சியடையும் FD களுக்கு மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1001 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 9.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1095 நாள்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு ஒன்பது சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“