7% மேல் வட்டி: இந்த 8 போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்கள் தெரியுமா?
முதலீடுக்கு 7 சதவீதத்துக்கும் மேல் வட்டி வழங்கும் 7 அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டங்கள் உறுதியான வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.
Post Office Savings Scheme | இந்திய அஞ்சலகங்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல்வேறு சேமிப்பு, டைம் டெபாசிட் திட்டங்களை வழங்கிவருகின்றன. பொதுவாக அஞ்சலக திட்டங்களில் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். இதில் 8 திட்டங்கள் 7 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி வழங்கிவருகின்றன. அவை, பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), கிசான் விகாஸ் பத்ரா (KVP), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் தபால் அலுவலக மாத வருமானத் திட்டம் (POMIS) ஆகியவை ஆகும். இந்தத் திட்டங்களின் வட்டி விகிதம் குறித்து இங்கு பார்க்கலாம்.
Advertisment
திட்டம்
வட்டி வகிதம் (%)
2 ஆண்டு டைம் டெபாசிட்
7.00%
3 ஆண்டு டைம் டெபாசிட்
7.10%
5 ஆண்டு டைம் டெபாசிட்
7.50%
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்
8.20%
மாத வருவாய் கணக்கு
7.40%
தேசிய சேமிப்பு சான்றிதழ்
7.70%
பி.பி.எஃப்
7.10%
கிஷான் விகாஸ் பத்ரா
7.50%
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிழ்
7.50%
சுகன்யா சம்ரித்தி கணக்கு
8.20%
பி.பி.எஃப்
ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமான அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) 15 ஆண்டுகள் கால திட்டமாகும். முதிர்வுக்கு பின்னர் இத்திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம். இதில் குறைந்தப்பட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். திட்டத்தில், ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
கிஷான் விகாஸ் பத்ரா
கிசான் விகாஸ் பத்ரா சான்றிதழ்களில் முதலீடு - டெபாசிட் சான்றிதழ்கள் என்றும் அழைக்கப்படுகிறது - 115 மாதங்களில் (ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள்) இரட்டிப்பாகும். இந்தத் திட்டம் அதிகபட்சமாக ரூ. 1,000 வைப்புத் தொகைக்கு மேல் முதலீடு செய்ய வரம்பு இல்லை.
சுகன்யா சம்ரித்தி கணக்கு
தமிழ்நாட்டில் செல்வ மகள் சேமிப்ப திட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் ஒருவர் தனது பெண் குழந்தையின் பெயரில் ரூ.250ல் திட்டத்தை தொடங்கலாம். இதில் அதிகப்பட்சமாக 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்
பெண்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் வரிச் சலுகைகளுடன் பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தை வழங்கும் சிறப்பு சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் தற்போதைய நிலையான வட்டி 7.5 சதவீதமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் முதலீடு செய்யலாம். திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“