எந்த வங்கியில் கோல்டு லோன் வட்டி கம்மி: செக் பண்ணுங்க!
Gold loan interest rate | குறைந்த வட்டியில் தங்க நகைக் கடன்கள் வழங்கும் பல்வேறு வங்கிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பாருங்கள்.
Gold loan interest rate | பொதுவாக தங்க நகை அடமானக் கடன்கள் தற்போது மிக எளிதாக கிடைக்கின்றன. இந்த கடன்களில் பல்வேறு வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகின்றன. மேலும், இந்தப் பாதுகாக்கப்பட்ட தங்க நகைக் கடன்கள் அவசரகாலத்தின் போது ரொக்கப் பற்றாக்குறை உள்ளவர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், அவரது நிதி இலக்குகளை நிறைவேற்றவும் உதவுகின்றன.
Advertisment
தங்கக் கடன்கள் பெரும்பாலும் சராசரி முதல் குறைந்த கிரெடிட் ஸ்கோரைக் கொண்ட கடன் வாங்குபவர்களின் முதல் தேர்வாகும். இது அதிக தனிநபர் கடன் கட்டணங்கள் அல்லது மோசமான நிலையில் தனிநபர் கடன் விண்ணப்ப நிராகரிப்புக்கு வழிவகுக்கும்.
ரூ.5 லட்சம் வரையிலான தங்க நகைக் கடன்கள் வட்டி விகிதம்
வங்கி
வட்டி விகிதம் (%)
சென்டிரல் வங்கி
8.55%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
8.85%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
9.15%
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
9.25%
ஃபெடரல் வங்கி
8.99%
பஞ்சாப் நேஷனல் வங்கி
9.25%
கனரா வங்கி
9.25%
யூனியன் வங்கி
9.50%
பேங்க் ஆஃப் இந்தியா
8.80%
இந்தியன் வங்கி
8.65%
பேங்க் ஆஃப் பரோடா
9.40%
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
10.00%
கடன் வழங்குபவர்கள் ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த விளம்பரப்படுத்தப்பட்ட தங்கக் கடன் வட்டி விகிதத்தை மட்டுமே இதில் கொடுத்துள்ளோம். செயலாக்கக் கட்டணம் அல்லது EMI கணக்கீட்டிற்கான வேறு எந்தக் கட்டணங்களையும் கருத்தில் கொள்ளவில்லை, மேலும் உங்கள் கடன் தொகையைப் பொறுத்து உங்களுக்குப் பொருந்தும் விகிதங்கள் அதிகமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“