Advertisment

குறைந்த வட்டியில் ஹோம்லோன்: இந்த வங்கிகளை நோட் பண்ணுங்க

ஹோம் லோனுக்கு குறைந்த வட்டி வழங்கும் 6 வங்கிகள் குறித்து பார்க்கலாம். இந்த வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர்-ஐ பொறுத்து மாறுபடலாம்.

author-image
WebDesk
New Update
HDFC home loans HDFC cuts prime lending rates on home loans

ஹெச்டிஎஃப்சி வங்கி ஆண்டுக்கு 8.75 முதல் 9.40 சதவீதம் வரையிலான நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது

வங்கிகள் ஹோம் லோனை வழங்குகினறன. இந்த வீட்டுக் கடன்கள் சில நேரங்களில் அதிக வட்டியை ஏற்படுத்திவருகின்றன. மறுபுறம் கால விரயமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், ஹோம் லோனுக்கு குறைந்த வட்டி வழங்கும் 6 வங்கிகள் குறித்து பார்க்கலாம். இந்த வட்டி விகிதங்கள் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர்-ஐ பொறுத்து மாறுபடலாம்.

Advertisment

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆண்டுக்கு 8.6 சதவீதம் முதல் 9.65 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி 9.25 முதல் 9.65 சதவிகிதம் (சம்பளம் பெறுபவர்களுக்கு) மற்றும் 9.40 சதவிகிதம் முதல் 9.80 சதவிகிதம் வரை (சுய தொழில் செய்பவர்களுக்கு) ₹35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களை வழங்குகிறது.

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி வீட்டுக் கடன்களை சம்பளம் பெறும் நபர்களுக்கு 8.7 சதவீதத்திலும், சுயதொழில் செய்பவர்களுக்கு 8.75 சதவீதத்திலும் வட்டி விகிதத்தில் வழங்குகிறது.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி வீட்டுக் கடன்களை சம்பளம் பெறும் நபர்களுக்கு 8.75 சதவீதத்திலும், சுயதொழில் செய்பவர்களுக்கு 8.85 சதவீதத்திலும் வட்டி விகிதத்தில் வழங்குகிறது.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா வங்கி சம்பளம் பெறுவோர் மற்றும் சம்பளம் பெறாத நபர்களுக்கு 8.4 முதல் 10.60 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி ஆண்டுக்கு 8.75 முதல் 9.40 சதவீதம் வரையிலான நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. சிறப்பு வீட்டுக் கடன் விகிதம் 8.5 முதல் 9.15 சதவீதம் வரை இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment