ஆர்.டி. சேமிப்புக்கு கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் 7 சதவீதத்திற்கு மேல் வட்டி தருகின்றன. இதில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டும். எஃப்டியை விட குறைவான வட்டியும், சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டியும் தருவது இதன் சிறப்பு.
எஸ்பிஐ ஆர்டி வட்டி விகிதங்கள்
எஸ்பிஐ 6.50% முதல் 7% வரை ஆர்.டி. சேமிப்புக்கு வட்டி வழங்குகிறது.
- 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை 6.80%
- 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 7.00%
- 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.50%
- 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை 6.50%
ஐசிஐசிஐ வங்கி ஆர்.டி வட்டி விகிதங்கள்
ஐசிஐசிஐ வங்கி இரண்டு வகையான தொடர் வைப்புத்தொகைகளை வழங்குகிறது, அதாவது 4.75 % முதல் 7.10% வரை வட்டி சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேநேரம், மூத்த குடிமக்களுக்கு 5.25% முதல் 7.60% வரை வட்டி வழங்குகிறது. முதலீட்டு காலம் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும்.
- 6 மாதங்கள் 4.75%
- 9 மாதங்கள் 6.00%
- 12 மாதங்கள் 6.70%
- 15 மாதங்கள் 7.10%
- 18 மாதங்கள் 7.10%
- 21 மாதங்கள் 7.10%
- 24 மாதங்கள் 7.10%
- 27 மாதங்கள் 7.00%
- 30 மாதங்கள் 7.00%
- 33 மாதங்கள் 7.00%
- 36 மாதங்கள் 7.00%
- 3 ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகள் வரை 7.00%
- 5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரை 6.90%
ஹெச்டிஎஃப்சி ஆர்.டி வட்டி விகிதங்கள்
ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஆர்.டி வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 4.50% முதல் 7% வரை வருகின்றன. இதில், பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு 5% முதல் 7.75% வரை வட்டி விகிதங்கள் கிடைக்கும்.
இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 24, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.
- 6 மாதங்கள் 4.50%
- 9 மாதங்கள் 5.75%
- 12 மாதங்கள் 6.60%
- 15 மாதங்கள் 7.10%
- 24 மாதங்கள் 7.00%
- 27 மாதங்கள் 7.00%
- 36 மாதங்கள் 7.00%
- 39 மாதங்கள் 7.00%
- 48 மாதங்கள் 7.00%
- 60 மாதங்கள் 7.00%
- 90 மாதங்கள் 7.00%
- 120 மாதங்கள் 7.00%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“