பொதுவாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளிலிருந்து உத்தரவாதமான வருமானத்தை எதிர்பார்க்கும் போது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பெஸ்ட் என நினைக்கின்றனர்.
ஏனெனில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் அவர்களுக்கு முதிர்வுக்கான நிலையான வட்டியை வழங்குகின்றன, மேலும் அவர்கள் அசல் தொகையையும் திரும்பப் பெறுகிறார்கள்.
ஆகவே, நிறைய மூத்த குடிமக்கள் எஃப்.டி.-ஐ ஓய்வூதியத் திட்டமாகப் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு முறை முதலீடு செய்து, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திரம் என தவணைகளில் வருமானத்தைப் பெறுகிறார்கள்.
அந்த வகையில், மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களில் 5 ஆண்டுகளில் முதலீடுகளுக்கு எவ்வளவு வட்டியை பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.
இதையும் படிங்க : ரூ.2.11 லட்சம் கோடி உபரி நிதி; மத்திய அரசுக்கு வழங்க ஆர்.பி.ஐ ஒப்புதல்
5 ஆண்டு திட்டம்
எஸ்.பி.ஐ வங்கியில் 5 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மூத்தக் குடிமக்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வின்போது அவர்களுக்கு 6.50 சதவீத வட்டியில் ரூ.1,90,210 வட்டியாக கிடைக்கும். அதாவது, முதலீடு செய்த அசல் தொகையுடன் சேர்த்து ரூ.6,90,210 கிடைக்கும்.
இந்த முதலீட்டு திட்டத்துக்கு வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின்படி ரூ.1.50 லட்சத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“