ரூ.3 கோடிக்குக் குறைவான தொகைக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பல்வேறு வங்கிகள் திருத்தியுள்ளன. இந்தத் திருத்தத்திற்குப் பிறகு எந்த வங்கி அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது என்பதைச் சரிபார்க்கவும். இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஆக்ஸிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
ஆக்சிஸ் வங்கி தனது ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை ஜூலை 1, 2024 முதல் திருத்தியுள்ளதாக வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட எஃப்.டி வட்டி விகிதங்கள் ரூ.3 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும்.
மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் காலத்தில் 7.75% அதிக வட்டி விகிதத்தை பெறுவார்கள்.
தனிநபர்களுக்கு, 17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் எஃப்.டிகளில் அதிகபட்ச வட்டி விகிதம் 7.2% வரை செல்லலாம்.
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வட்டி விகிதங்கள்
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை ஜூலை 1, 2024 முதல் மாற்றியமைத்துள்ளதாக வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ரூ. 3 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும். மூத்த குடிமக்களுக்கு 12 மாத காலப்பகுதியில் 8.75% வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. தனிநபர்களுக்கு, 12 மாத கால அவகாசத்தில் எஃப்.டிகளில் அதிகபட்ச வட்டி விகிதம் 8.25% ஆக உள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது நிலையான வைப்பு (எஃப்டி) வட்டி விகிதங்களை ஜூலை 1, 2024 முதல் மாற்றியமைத்துள்ளதாக வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட எஃப்.டி விகிதங்கள் ரூ. 3 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும். மூத்த குடிமக்களுக்கு 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான கால அவகாசத்தில் 7.75% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. தனிநபர்களுக்கு, 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதியில் FD களில் அதிகபட்ச வட்டி விகிதம் 7.2% வரை கிடைக்கும்.
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி தனது நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை ஜூலை 1, 2024 முதல் திருத்தியுள்ளதாக வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ரூ. 3 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும். மூத்த குடிமக்களுக்கு 666 நாட்களில் 7.80% வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. தனிநபர்களுக்கு, எஃப்.டிகளில் அதிகபட்ச வட்டி விகிதம் அதே காலப்பகுதியில் 7.3% வரை இருக்கலாம்.
பேங்க் ஆஃப் இந்தியா
பேங்க் ஆஃப் இந்தியா தனது ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை ஜூன் 30, 2024 முதல் திருத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட இந்தப் புதிய எஃப்.டி விகிதங்கள் ரூ.3 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும். வங்கி மூத்த குடிமக்களுக்கு 666 நாட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதமான 7.80% வழங்குகிறது. தனிநபர்களுக்கு, அதிகபட்ச வட்டி விகிதம் அதே காலப்பகுதியில் 7.3% வரை இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“