Fixed Deposits | அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இது பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், முதலீட்டாளர்கள் இதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
இந்த நிலையில் எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் சமீபத்திய நிலையான வைப்பு (FD) விகிதங்கள், பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.5% முதல் 7% வரையில் வழங்குகிறது.
இதுவே, மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.5% வரையில் வழங்குகிறது. இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதம் டிசம்பர் 27, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3% முதல் 7.2% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகைகளுக்கு 3.5% முதல் 7.75% வரையிலான வட்டி விகிதங்களைப் பெறுவார்கள். இந்த வட்டி 2024 பிப்ரவரி 17ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கியானது 7 நாள்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3% முதல் 7.25% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகைகளுக்கு 3.5% முதல் 7.75% வரையிலான வட்டி விகிதங்களைப் பெறுவார்கள். இது, பிப்ரவரி 9, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா
7 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு, பேங்க் ஆஃப் இந்தியா (BOI) 3% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
46 நாள்கள் முதல் 179 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு, 4.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 180 நாள்கள் முதல் 269 நாள்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு, 5.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதே சமயம் 270 நாள்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு, வங்கி 5.75% வட்டியை வழங்குகிறது. 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.80% வட்டி விகிதம் கிடைக்கும், மேலும் 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடைபவர்களுக்கு அதிகபட்ச வருமானம் 7.25% ஆக இருக்கும்.
மேலும், இரண்டு வருடம் முதல் மூன்று வருடங்களுக்கும் குறைவான டெபாசிட்களுக்கு வங்கி 6.75% வட்டி வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“