/indian-express-tamil/media/media_files/2025/05/27/lALP1ZblTBEyVjdxjDWW.jpg)
இன்றைய சூழலில் தனிநபர் கடன் என்பது சிலருக்கு அத்தியாவசியமான தேவையாக மாறி இருக்கிறது. எதிர்பாராமல் ஏற்படும் செலவுகள், தவிர்க்க முடியாத பயணங்கள், மருத்துவ தேவைகள் என பல காரணங்களுக்காக மக்கள் தனி நபர் கடன்களை நாடுகின்றனர்.
ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ விகிதங்களை குறைத்திருந்தாலும், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள், ஒவ்வொரு கடன் வழங்கும் நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். உங்கள் கிரெடிட் ஸ்கோர், வருமான நிலை, கடன் திருப்பி செலுத்தும் வரலாறு ஆகியவை உங்களுக்கான கடன் வழங்கும் வாய்ப்பு மற்றும் வட்டி விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், சமீபத்திய நிலவரப்படி முன்னணி வங்கிகளில் இருந்து வழங்கப்படும் பெர்சனல் லோனுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
வங்கிபெயர் | வட்டிவிகிதம் (ஆண்டுக்கு) | கடன்தொகை | காலம் | செயலாக்கக்கட்டணம் |
ஆக்ஸிஸ்வங்கி | 9.99% – 22.00% | ரூ. 40 லட்சம்வரை | 1–7 ஆண்டுகள் | 2% வரை |
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா | 10.30% – 15.30% | ரூ. 35 லட்சம்வரை | 1–7 ஆண்டுகள் | 1.5% வரை (ரூ. 1,000–ரூ. 15,000) |
ஐ.சி.ஐ.சி.ஐவங்கி | 10.85% – 16.65% | ரூ. 50 லட்சம்வரை | 1–6 ஆண்டுகள் | 2% வரை |
ஹெச்.டி.எஃப்.சிவங்கி | 10.90% – 24.00% | ரூ. 40 லட்சம்வரை | 1–5 ஆண்டுகள் | ரூ. 6,500 வரை |
கோடக்மஹிந்திராவங்கி | 10.99% – 16.99% | ரூ. 35 லட்சம்வரை | 1–6 ஆண்டுகள் | 5% வரை |
கனராவங்கி | 9.95% – 15.40% | ரூ. 20 லட்சம்வரை | 1–7 ஆண்டுகள் | 0.25% வரை (அதிகபட்சம்ரூ. 2,500) |
யூனியன்பேங்க்ஆஃப்இந்தியா | 10.35% – 14.45% | ரூ. 15-20 லட்சம்வரை | 1–7 ஆண்டுகள் | 1% வரை (அதிகபட்சம் ₹7,500) |
பேங்க்ஆஃப்பரோடா | 10.40% – 18.20% | ரூ. 50 லட்சம்வரை | 1–7 ஆண்டுகள் | 2% வரை (அதிகபட்சம்ரூ. 10,000) |
இந்த வட்டி விகிதங்கள் அனைத்தும் ஒவ்வொரு நபரின் அளவுகோல்களுக்கு ஏற்ப மாறுபடும். எனவே, விண்ணப்பிக்கும் முன்பு முறையாக ஆராய்வது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.