Kisan Vikas Patra (KVP) 2023: கிசான் விகாஸ் பத்ரா, பொதுவாக கே.வி.பி என அழைக்கப்படுகிறது, இது தபால் அலுவலகம் வழங்கும் சிறந்த சிறிய சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். தற்போது, கே.வி.பி.எஸ் ஆண்டுதோறும் 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் பயன்கள்
- சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல், நீங்கள் தொகை உத்தரவாதம் பெறுவீர்கள்.
- இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு முறை மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது அல்ல.
- ஒரு கே.வி.பி கணக்கை குறைந்தபட்சம் ₹ 1,000 உடன் திறக்கலாம் மற்றும் அதன்பிறகு ₹ 100 மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
- அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.
நாட்டில் உள்ள எந்த தபால் அலுவலகத்திலும் கிஷான் விகாஸ் பத்ரா கணக்கை தொடங்கலாம்.
- கிசான் விகாஸ் பத்ராவின் முதிர்வு காலம் 115 மாதங்கள் ஆகும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்துக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 194A இன் படி வரிச் சலுகை உண்டு.
தகுதிகள்
- 18 வயதை தாண்டிய எந்த ஒரு இந்திய குடிமகனும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
- மனவளர்ச்சி குன்றியவர்கள் பெயரில் முதலீடு செய்யப்பட்டால் பாதுகாப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
முதலீடு செய்வது எப்படி?
- முறையாக நிரப்பப்பட்ட படிவத்தை தபால் அலுவலகம் அல்லது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
- கே.ஒய்.சி. ஆவணங்கள் கட்டாயம்.
- கணக்கு தொடங்க பான் கார்டு, ஆதார் கார்டு , டிரைவிங் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டும். பணம், காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் செலுத்த வேண்டும்.
- நீங்கள் உடனடியாக கேவிபி சான்றிதழைப் பெறுவீர்கள். முதிர்வு நேரத்தில் இதை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால், அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“