வணிகம், கார், வீடு மற்றும் கல்வி போன்ற எந்த வகையான எதிர்பாராத செலவுகளுக்கும் கடன் பெற பெரும்பாலானோர் வங்கியையே நம்புகிறோம்.
ஆனால், உங்கள் தேவை இந்த வகையான எதிலும் வராமல் திருமண விருந்து அவசர வெளிநாட்டு செலவு போன்ற செலவுகளாக இருந்தால் என்ன செய்யலாம்.
இதுபோன்ற உடனடி பணத் தேவைக்கும் நிச்சயமாக வங்கியிலிருந்து தனிநபர் கடன் பெறலாம். தனிநபர் கடன்கள் பொதுவாக பாதுகாப்பற்றவை, எனவே, தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள் அதிக வட்டி விகிதத்தை வசூலிக்கின்றன.
இந்த நிலையில் குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்கள் வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
வங்கிகளில் தனிநபர் கடனுக்கான குறைந்த வட்டி விகிதங்கள்:
கரூர் வைஸ்யா வங்கி
கரூர் வைஸ்யா வங்கி பாதுகாக்கப்பட்ட தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 11 சதவீதமும், பாதுகாப்பற்ற தனிநபர் கடனுக்கு 13-14 சதவீதமும் வசூலிக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி:
பஞ்சாப் நேஷனல் வங்கி கடனாளியின் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து ஆண்டுக்கு 13.75 முதல் 17.25 சதவீதம் வரை மாறுபடும் வட்டி விகிதத்தை வசூலிக்கிறது. அதே நேரத்தில், அரசு ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதம் 12.75 சதவீதம் முதல் 15.25 சதவீதம் வரை மாறுபடும்.
கோடக் மஹிந்திரா வங்கி:
தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கி தனிநபர் கடனில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10.99 சதவீதத்தை வசூலிக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி:
இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, தனிநபர் கடனில் ஆண்டுக்கு 10.65 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை வசூலிக்கிறது.
எஸ்பிஐ:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) கார்ப்பரேட் விண்ணப்பதாரர்களுக்கு 12.30 முதல் 14.30 சதவிகிதம் வசூலிக்கிறது.
பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 11.15 முதல் 12.65 சதவீதம் வரை சலுகை வட்டியில் தனிநபர் கடன் வழங்கப்படுகின்றன.
பேங்க் ஆஃப் பரோடா:
வங்கியுடன் தொடர்பு கொண்ட தனியார் துறை ஊழியர்களுக்கு தனிநபர் கடன்கள் ஆண்டுக்கு 13.15 முதல் 16.75 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.
அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 12.40 முதல் 16.75 சதவீதம் வரை சலுகை விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
வங்கியுடன் எந்த தொடர்பும் இல்லாத தனியார் துறை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15.15 முதல் 18.75 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது.
ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி
மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி, 10.5 முதல் 24 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வசூலிக்கிறது, அதே சமயம் செயலாக்கக் கட்டணங்கள் ₹4,999 ஆகும்.
ஆக்சிஸ் வங்கி:
ஆக்சிஸ் வங்கி தனது தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 10.65 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை மாறுபடும் வட்டி விகிதத்தை வசூலிக்கிறது.
பொதுவாக, வங்கிகள் தனிநபர் கடனுக்கு அதிக வட்டி விகிதத்தை வசூலிக்கின்றன. ஆனால் வசூலிக்கும் விகிதம் விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோர், வங்கியுடனான உறவு, முதலாளியின் வகை (MNC/ govt/ defence, முதலியன) போன்றவற்றை பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“