Advertisment

ரூ.6 ஆயிரம் தங்கம் வாங்கினால், ரூ.1200 வட்டி வருமானம்; இந்தத் திட்டம் தெரியுமா?

இறையாண்மை தங்கப் பத்திரத்தில் குறைந்தபட்ச முதலீடு 1 கிராம் தங்கம் ஆகும். அதிகபட்ச வரம்பு தனிநபர்களுக்கு 4 கிலோ ஆகும். அறக்கட்டளை நிறுவனங்களுக்கு, அதிகபட்ச வரம்பு 20 கிலோ ஆகும்.

author-image
WebDesk
New Update
sgb gold bond price, sgb gold, sgb scheme, sgb bond, sovereign gold bond scheme 2020-21 dates, price, how to apply, where to buy,sgb gold bond news, sgb gold bond news in tamil, sgb gold bond latest news, sgb gold bond ltest news in tamil

இறையாண்மை தங்கப் பத்திரங்கள் நேரடியாக தங்கத்தை வைத்திருப்பதற்கான மாற்றாகும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் இறையாண்மை தங்கப் பத்திரங்கள் (SGBs) வெளியிடப்படுகின்றன.

மேலும், இந்த இறையாண்மை தங்கப் பத்திரங்கள் (SGB) கள் அரசாங்க ஆதரவு பத்திரங்கள் ஆகும். இதை சொத்துக்களாக கருத முடியும்.

Advertisment

இந்தத் தங்கப் பத்திரங்களின் விலையை இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது. இந்தப் பத்திரங்களை ஆன்லன் டிஜிட்டல் மூலமாக பரிவர்த்தனை செய்து வாங்கினால் ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும், முதலீட்டின் தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியை அரசாங்கம் வழங்குகிறது. கடைசி வட்டியானது முதிர்ச்சியின் போது அசல் தொகையுடன் செலுத்தப்படும்.

உதாரணமாக, ஒரு தனி நபர் 1 யூனிட் (1 கிராம் தங்கம்) ரூ.6,000க்கு வாங்கியிருந்தால், வாங்குபவர் ரூ.1,200 வட்டியைப் பெறுவார்.

இந்தத் திட்டத்தின் (SGB) அடுத்த தவணை பிப்ரவரி 12ஆம் தேதியன்று சந்தாவிற்கு திறக்கப்படும். சந்தா பிப்ரவரி 16ஆம் தேதி நிறைவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sovereign Gold Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment